அசாமில் 70 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக; முதல்வர் சர்பானந்தா சோனோவால் மஜூலியில் போட்டி!
டெல்லி: அசாமில் போட்டியிடும் 70 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மஜூலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அசாம் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் தாஸ் படச்சர்குச்சியில் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களில் அசாமில் மட்டும்தான் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

அசாமில் மாநிலத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அசோம் கன பரிஷத், ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜக, தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த நிலையில் அசாமில் போட்டியிடும் 70 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.
அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மஜூலி தொகுதியில் போட்டியிடுகிறார். அசாம் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் தாஸ் படச்சர்குச்சியில் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜாலுக்பாரி தொகுதியில் அசாம் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போட்டியிடுகிறார். தற்போது நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களில் அசாமில் மட்டும்தான் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.