டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது

மீண்டும் பாஜகவின் ஆதிக்கம் தொடர்கிறது என கருதப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra & Haryana Assembly : மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது!

    டெல்லி: என்னா மாதிரியான தலைவர்கள் இவர்கள் என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள் மோடியும், அமித் ஷாவும். நடந்து முடிந்த மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல்களில் மீண்டும் பாஜகவே வெல்லும் என்று அத்தனை கருத்துக் கணிப்புகளும் கூறி விட்டன.

    இப்போதுதான் லோக்சபா தேர்தல் முடிந்தது. அதில் இதுவரை வெல்லாத இடங்களிலும் கூட பாஜக முத்திரை பதித்தது. தமிழ்நாட்டில் தடம் கூட பதிக்க முடியவில்லை. அதை விடுங்க.

    வரலாறு காணாத பெரும் வெற்றியைப் பெற்ற பாஜகவின் இந்த வெற்றி நடைக்கு அமித் ஷாதான் முக்கியக் காரணம். இதனால்தான் அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் என்ற மிகப் பெரிய பரிசைக் கொடுத்து தனக்கு பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

    கட்சி கோட்டை

    கட்சி கோட்டை

    அடுத்து வந்து சேர்ந்தது இந்த இரு மாநில பொதுத் தேர்தல். அதாவது ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா. இந்த இரு மாநிலங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு. அதாவது இரு மாநிலங்களுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக ஒரு காலத்தில் விளங்கியவை.

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா

    அதிலும் ஹரியானா என்றால் பஜன்லால், தேவிலால், பன்சிலால், செளதாலா என்றுதான் காலம் ஓடிக் கொண்டிருந்தது. அதேபோல மகாராஷ்டிராவிலும் காங்கிரஸைத் தாண்டி யாரும் வர முடியாத நிலை. ஆனானப்பட்ட பால்தாக்கரேவே கூட மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலைதான். இந்த இரு மாநிலங்களுமே தற்போது பாஜக கையில் உள்ளன.

    எக்சிட் போல்

    எக்சிட் போல்

    மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சியில் உள்ளது. அதேபோல ஹரியானாவிலும் கட்டார் தலைமையிலான கூட்டணி, ஆட்சியில் உள்ளது. இங்கு இந்த இரு கூட்டணியும் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று அனைத்து எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளும் சொல்லி வைத்தாற் போல கூறியுள்ளன. இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

    வியப்பான தீர்ப்பு

    வியப்பான தீர்ப்பு

    ஒரு கருத்துக் கணிப்பில் கூட வேறு கட்சிக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படவே இல்லை. கிட்டத்தட்ட இரு மாநில மக்களும் பாஜகவிடமே ஒட்டுமொத்தமாக சரணடைந்து விட்டதாக தெரிகிறது. அப்படி ஒரு ஆணித்தரமான தீர்ப்பை மக்கள் எழுதி விட்டதாகவே எடுத்துக் கொள் வேண்டியுள்ளது. இதுதான் வியப்பளிக்கிறது.

    வீம்பு

    வீம்பு

    மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பாஜகவும் சிவசேனாவும் கூட்டணிக் கட்சிகள் என்றாலும் கூட சிவசேனா அப்பப்ப சீண்டிட்டே இருக்கும். அதை பாஜக கண்டு கொள்ளாது. காரணம், கடைசி நேரத்தில் என் காலடிக்குத்தான் நீ வர வேண்டும் என்ற எதார்த்தம். சிவசேனாவுக்கும் இது புரியும். இருந்தாலும் தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் வீம்பு பிடிக்கும். கடைசி நேரத்தில் வந்து ஒட்டிக்கும். இப்படித்தான் தேர்தலுக்கு முன்பும் நடந்தது.

    அறுவடை

    அறுவடை

    தற்போது தேர்தலில் இரு கட்சிகளுமே நல்லஅறுவடையைச் செய்யப் போகின்றன என்று எக்சிட் போல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது இவர்கள் இருவரின் தனிப்பட்ட வெற்றியல்ல. நிச்சயம் அமித் ஷா மற்றும் மோடியின் கூட்டுத் தலைமைக்குக் கிடைத்த வெற்றிதான். அதை நாம் சொல்லியாக வேண்டும்.

    காவிக் கொடி

    காவிக் கொடி

    அதேபோலத்தான் ஹரியானாவிலும் கடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தது. காங்கிரஸ் கோட்டையான ஹரியானாவில் காவிக் கொடி முதல் முறையாக 2014ல் பறந்தது. தற்போது மீண்டும் கொடியை தக்க வைக்கப் போகிறது பாஜக. இது நிச்சயம் சாதனைதான்.

    வீழ்ச்சி - பலம்

    வீழ்ச்சி - பலம்

    ஆக மொத்தம் காவிக் கொடிக்கு இப்போதைக்கு பின்னைடவு இல்லை. கண்ணுக்கு எட்டும் தொலைவிலும் அது இல்லை என்பதை நிதர்சனமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி விரைவில் தனது தலைமையை பலப்படுத்தி துரிதமாக வீழ்ச்சியிலிரு்நது மீண்டால்தான் அதன் எதிர்காலம் ஓரளவுக்கு நல்லா இருக்கும். இல்லாவிட்டால் கஷ்டம்தான்.

    English summary
    The BJP is going to take back the rule in Haryana, Maharashtra and its dominance continues again
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X