டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரட்டும் சிபிஐ.. 24 மணி நேரத்தில் 4 முறை ப.சிதம்பரம் வீட்டுக்கு விசிட்.. இவ்வளவு அவசரம் ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்!

    டெல்லி: சிபிஐ அதிகாரிகள் விடாமல் ப.சிதம்பரத்தை விரட்டி விரட்டி வந்து கொண்டிருக்கின்றனர்... இதுவரை 4-வது முறையாக சிதம்பரம் வீட்டிற்கு அதிகாரிகள் வந்து குவிந்துள்ளது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

    டெல்லி ஹைகோர்ட் முன் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டும் சொல்லிவிட்ட நிலையில், நேற்று சாயங்காலம் ப.சிதம்பரம் வீட்டுக்கு நேரடியாகவே சிபிஐ சென்றுவிட்டார்கள்.

    The CBI team has left from the residence of P Chidambaram 3rd time today

    அங்கு ஆள் இல்லை என்றதும், திரும்பி சென்றனர். இதையடுத்து, ராத்திரி 11.30 மணிக்கு திரும்பவும் அதிகாரிகள் வந்தபோதும் சிதம்பரம் வீட்டில் இல்லை. அதனால், விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 மணி நேரம் கெடு விதித்து, வீட்டிலேயே நோட்டிஸ் ஒன்றையும் ஒட்டிவிட்டு வந்தார்கள்.

    இந்நிலையில், இன்று காலை, 6 அதிகாரிகள் மறுபடியும் சிதம்பரம் வீட்டிற்கு சென்ற நிலையில், அவர்களை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் வந்தார்கள். ஆனால் அந்த நேரத்திலும் வீட்டில் சிதம்பரம் இல்லை. அதனால் அரை மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள், அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர்.

    தற்போது, சிறிது நேரத்துக்கு முன்பும் அதிகாரிகள் 4-வது முறையாக சிதம்பரம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அதாவது 24 மணி நேரத்தில் 4 முறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, ப.சிதம்பரத்தை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என்று காங்கிரஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது.

    English summary
    INX media case judgement: The CBI team has left from the residence of P Chidambaram 4th time this morning
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X