டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிபிஎஸ்சி ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில், 10 % இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்ட விதிகள் 15 மற்றும் 16-ல் திருத்தங்களை சமீபத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது

The CBSE teacher qualification examination was sought by 10% reservation.. order to respond central government

மேற்கண்ட சட்ட விதிகளில் திருத்தம் செய்த 103-வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது பின்னர் இச்சட்டத்தின்படி, இடஒதுக்கீடு வழங்க அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது

கமல்ஹாசன் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்க... டெல்லி நீதிமன்றம் உத்தரவு கமல்ஹாசன் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்க... டெல்லி நீதிமன்றம் உத்தரவு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ கடந்த ஜனவரியில் வெளியிட்டது. சிபிஎஸ்சி நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு நாடு முழுவதும் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது இத்தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை எனக்கூறி ரஜ்னீஷ் குமார் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த வழக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் உள்ள ஆசிரியர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தகுதி தேர்வுக்கு எந்த இட ஒதுக்கீடும் இருக்க முடியாது இது முற்றிலும் தவறான கருத்து மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் வேலையில் சேருவதற்கான தகுதியை அடைவதற்கான ஒரு தேர்வு மட்டுமே இதில் இட ஒதுக்கீடு என்பது வேலையில் சேரும் போது மட்டுமே வரும் என நீதிபதிகள் விளக்கம் அளித்திருந்தனர்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜ்னீஷ் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன என விளக்கம் அளித்தார்

இதனையடுத்து இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்சி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

English summary
The Supreme Court has ordered to Central Government give 10 percent reservation to the poor in the Central Teacher Eligibility Test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X