டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்..தனியார் வங்கிகளுக்கு வருமான வரித்துறை வார்னிங்.. பின்வாங்காத வங்கிகள்

Google Oneindia Tamil News

டெல்லி: யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை ஏற்று சில வங்கிகள் யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணங்களின் விவரங்களை தங்கள் வலைத்தளங்களிலிருந்து அகற்றியுள்ளன,

வங்கி கணக்கில் இருந்து மொபைல் போன் மூலம் எளிதாக பணத்தை ஒரு அக்கவுண்டில் இருந்து இன்னொரு அக்கவுண்டிற்கு மாற்ற முடியும். இதற்க யுபிஐ ஆப் செயலில் உள்ளது. இதன் அடிப்படையில் தான் கூகுள் பே, பேடிஎம், போன் பே மற்றும் பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. இதில் பணம் அனுப்ப கட்டணம் கிடையாது என்பதால் பலரும் அதிகம் விரும்பி பரிவர்த்தனை செய்து வந்தனர். ஆனால் இப்போது சில தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டன.

மும்பை ஐஐடி வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி ஊரடங்கு காலத்தில் 8 சதவீதம் யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்தது. ஏப்ரல் மாதம் மட்டும் 80 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டது.

கர்நாடகா டிஜிபி மார்பில் பாய்ந்த 2 குண்டுகள்.. கைத் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்கர்நாடகா டிஜிபி மார்பில் பாய்ந்த 2 குண்டுகள்.. கைத் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்

மிகப்பெரிய உச்சம்

மிகப்பெரிய உச்சம்

இந்நிலையில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி .160 கோடியை எட்டி உள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, (யுபிஐ பரிவர்த்தனைகள் புதிய சாதனையை எட்டியுள்ளன, இது 8% தொடர்ச்சியாக உயர்ந்து 1.62 பில்லியன் (162 கோடி) பரிவர்த்தனைகளை ஆகஸ்ட் மாதத்தில் நடந்துள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை

யுபிஐ பரிவர்த்தனை

இதனால் சில தனியார் வங்கிகள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளன. அந்த வங்கிகள் 20 யுபிஐ பரிவர்த்தனைகளை மட்டுமே இலவசமாக அனுமதிக்கின்றன. அதற்கு மேல் 1000 வரை அனுப்ப 2.50 ரூபாய் முதல் ரூ. 2.75 வரையிலும் வசூலிக்கின்றன. இதேபோல் 1000க்கு மேல் பரிவர்த்தனை செய்ய ரூ.4.75 முதல் ரூ.5 வரை வசூலிக்கின்றன. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அபராதம் விதிக்கப்படும்

அபராதம் விதிக்கப்படும்

இதையடுத்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது மின்ணணு பரிவர்த்தனை தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட விதிகளை மீறும் செயலாகும். எனவே யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அகற்றாத வங்கிகள்

அகற்றாத வங்கிகள்

2020 ஆம் ஆண்டில் (யுபிஐ பரிவர்த்தனைகள் செய்ததற்காக தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட கட்டணங்களைத் திருப்பித் தருமாறு மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இதை ஏற்று ஒரு சில வங்கிகள் யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணங்களின் விவரங்களை தங்கள் வலைத்தளங்களிலிருந்து அகற்றியுள்ளன, ஆனால் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடாக் மகேந்திரா வங்கிகள் அவற்றை அகற்றவில்லை.

English summary
After the Central Board of Direct Taxes (CBDT) asked banks to refund charges collected from their customers and merchants for making Unified Payment Interface (UPI) transactions in 2020, a few banks have removed the details of UPI transaction charges from their websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X