டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி.. முதுகலை 'நீட்' தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை 'நீட்' தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இளம் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

The centre has announced the postgraduate NEET examination has been postponed due to the rising covid 19

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் மக்களை பாடாய்படுத்திய கொரோனா இந்த முறை அதைவிட மிக மோசமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த போதிலும் கொரோனா தொடர்ந்து அடங்க மறுக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அவசரம்.. ''கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் கொடுங்க'' .. மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்!அவசரம்.. ''கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் கொடுங்க'' .. மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்!

கொரோனா தொற்று ஆதிக்கம் அதிகமாக இருந்து வருவதால் சிபிஎஸ்இ நடத்தும் 10-ம் வகுப்பு தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. சிபிஎஸ்இ நடத்தும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ' கொரோனா காரணமாக முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், இளம் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். புதிய தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

English summary
The Central Government has announced that the postgraduate 'Need' examination scheduled to be held on April 18 has been postponed due to the rising covid 19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X