டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓடியாங்க.. ஓடியாங்க.. வீக் என்ட்டில் நெட்பிளிக்ஸ் இலவசம்.. இந்தியாவுக்கான ஃப்ரீ டிரையல் பிளான்

Google Oneindia Tamil News

டெல்லி: வாரக் கடைசியில் இலவசமாக வீடியோக்களை பார்ப்பதற்கு வசதியாக, நெட்பிளிக்ஸ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

அமெரிக்காவின், கலிபோர்னியாவைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோலோச்சிய போதிலும் இந்தியாவில், ஓடிடி தளங்களில் அதனால், முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.

இங்கு, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்றவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக விளங்கி வருகின்றன.

30 நாட்கள் டிரையல்

30 நாட்கள் டிரையல்

நெட்பிளிக்ஸ் பொதுவாக 30 நாட்கள் இலவசமான வீடியோ பார்க்கும் வசதியை வழங்கும். அதற்கு உங்களது கிரெடிட் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பதிவு செய்ய வேண்டி இருக்கும். இந்த நிலையில் இது போன்ற இலவச ட்ரையல் நடைமுறை அமெரிக்காவில் நிறுத்திவிட்டது நெட்பிளிக்ஸ்.

வார இறுதி பிளான்

வார இறுதி பிளான்

இந்தியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளிலும் ஒரு மாத இலவச ட்ரையல் நிறுத்தப்பட்டது. அதற்கு பதில் செல்போன்களில் மாதம் ரூ.199 கட்டணத்தில் நெட்பிளிக்ஸ் பார்க்கும் ஆஃபர் தரப்பட்டது. இந்த நிலையில் ஒரு வார இறுதிக்கு, இலவச டிரையல் நடை முறை அமல்படுத்தப்படும் என்று நெட்பிளிக்ஸ் தலைமை ப்ராடக்ட் அதிகாரி கிரேக் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இலவசம்

இலவசம்

எங்களது வீடியோக்கள் அனைவராலும் கண்டுகளிக்க இது ஒரு வாய்ப்பு. புதிய வாசகர்களை நெட்ப்ளிக்ஸ் சென்று சேர்வதற்கு இந்த இலவச ட்ரையல் உதவும். இவ்வாறு பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் வார இறுதியில் எந்த முறையில் இலவச டிரையல் வசதி வழங்கப்படும் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

தகவல் தேவை

தகவல் தேவை

கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பதிவு செய்து இலவச வசதியை பெற முடியுமா, அல்லது வெறுமனே ஏதாவது ஒரு வகையில் சைன்அப், செய்து நெட்பிளிக்ஸ் சேவைகளை பயன்படுத்த முடியுமா என்ற விவரங்கள் இனி வெளியாகவுள்ளது. வார இறுதி நாட்களில் பொதுமக்களில் பலரும் வீடுகளில் இருப்பார்கள். எனவே தங்களது தளத்தை அவர்கள் பயன்படுத்தி, அதனால் ஈர்க்கப்பட்டு வாடிக்கையாளராக மாறுவார்கள் என்று கணக்குப் போடுகிறது நெட்பிளிக்ஸ்.

English summary
Netflix is planning to offer a free trial of its service to everyone in a country for a weekend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X