டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அய்யய்யோ.. புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு.. வல்லுநர்கள் வார்னிங் !

Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரசே இந்தியாவில் பாடாய்படுத்தி வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ்(B.1.618) மேற்கு வங்கத்தில் மிக வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த மரபணு வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164; மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164; மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தினமும் 2,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி கொரோனா கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளுக்கும், பல மாநிலங்களில் நோய் வேகமாக பரவுவதற்கும் இந்த இரட்டை பிறழ்வு வைரஸ்கள் (இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா) காரணமாக இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ்

புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ்

இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரசே இந்தியாவில் பாடாய்படுத்தி வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. B.1.618 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த வைரஸ் ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தி வரும் இரட்டை பிறழ்வு வைரஸ்கள்(B.1.617) உடன் இணைந்து மேற்கு வங்கத்தில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக மரபணு வைரஸ் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

 நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும்

புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ்(B.1.618) மேற்கு வங்கத்தில் மிக வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த மரபணு வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்தை மையமாக கொண்ட தேசிய பயோமெடிக்கல் ஜெனோமிக்ஸ் நிறுவனம் (என்ஐபிஎம்ஜி) சமர்ப்பித்த புதிய மரபணு வைரஸ் பற்றிய அடிப்படை ஆதாரத்தை வைத்து ஆராய்ச்சி வல்லுநர்கள் இந்த புதிய வைரஸை மரபணு மாறுபாடுகளால் வகைப்படுத்தி உள்ளனர்.

இந்தியா முழுவதும் பரவுகிறதா?

இந்தியா முழுவதும் பரவுகிறதா?

புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் மேற்கு வங்கத்தில் தற்போது கண்டறியப்பட்டாலும் இந்தியா முழுவதும் அந்தளவுக்கு பரவவில்லை. ஆனால் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் ஏற்படுத்தும் நோயின் தாக்கம், இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி செயல்படும் விதம் ஆகியவை குறிதது இன்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The discovery of a new genetically modified virus in West Bengal has come as a shock as the dual genetically modified corona virus is spreading in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X