டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களின் கருத்துக்களை கேட்போம்.. இந்தி திணிப்பு குறித்து 'தமிழில்' நிர்மலா சீதாராமன் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே இந்தி கட்டாயம் என்ற வரைவு அறிக்கையை அமல்படுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.

The draft report of the Education Committee will be implemented after the public hearings, says Nirmala Sitharaman

அதில் முக்கியமானது என்னவென்றால், மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்பது தான். அதாவது இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆளும் அதிமுக அரசு தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் தொடர முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த் தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும், மொழி வாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும், ப்ரீ ஸ்கூல் முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்தி வழிக் கல்வி என்ற விபரீதமானநாட்டைப் பிளவுபடுத்தும் பரிந்துரையை இந்தக் குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதேபோல் டிடிவி தினகரன், வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன் உள்பட அனைத்து தரப்பினருமே இந்தியை தமிழகத்தில் கட்டாயமக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்கம், இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்பது தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரை தான் என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முடியும் எடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தது.

 ராணுவ வீரர்களுக்கு நடந்த கொடூரம்.. சரமாரியாக அடித்து உதைத்த உணவக ஊழியர்கள் ராணுவ வீரர்களுக்கு நடந்த கொடூரம்.. சரமாரியாக அடித்து உதைத்த உணவக ஊழியர்கள்

எனினும் நீர் பூத்த நெருப்பாக தமிழகத்தில் இந்தி பிரச்னை உள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே, கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் மோடி, அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே "ஒரே பாரதம் உன்னத பாரதம்" முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழினை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்" என்றார்.

English summary
minister Nirmala Sitharaman says The draft report of the Education Committee will be implemented after the public hearings, The Central Govt will support the devp of ancient Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X