டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் ரிசல்ட் அறிவிக்க 5 மணி நேரம் லேட் ஆகும்.. ஆணையம் அறிவிப்பு

தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results 2019: தேர்தல் முடிவுகள் உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்?

    டெல்லி: மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்பதாலேயே இந்த கால அவகாசம் என கூறி உள்ளது.

    வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில், அன்றைய தினம் மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும்.

    ஆனால் இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

    நாளை ரிசல்ட்.. இன்று பிரான்சில் ஐஏஎப் அலுவலகத்தில் பரபரப்பு.. ரபேல் ஆவணங்களை திருட முயற்சி? நாளை ரிசல்ட்.. இன்று பிரான்சில் ஐஏஎப் அலுவலகத்தில் பரபரப்பு.. ரபேல் ஆவணங்களை திருட முயற்சி?

    5 ஒப்புகை சீட்டு

    5 ஒப்புகை சீட்டு

    அதன்படி, ஒரு சட்டப்பேரவைக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் என்ற வகையில் ஒவ்வொரு எம்பி தொகுதிக்கும் 30 விவிபேட் இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும். ஒவ்வொரு விவிபேட் இயந்திரத்துக்கும் நம்பர் உள்ளன.

    விவிபேட்

    விவிபேட்

    குலுக்கல் முறையில் அதில் 5 இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். இதனை வீடியோவும் எடுப்பார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் விவிபேட் இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

    உத்தேச முடிவு

    உத்தேச முடிவு

    வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. அதனால் தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்குப் பிறகுதான் அறிய முடியும். மேலும் இறுதி முடிவைப் பெறுவதற்கு இரவு ஆகலாம் என்றும் தெரிகிறது.

    5 மணி நேரம்

    5 மணி நேரம்

    இதனை தேர்தல் ஆணையமும் தற்போது உறுதிபடுத்தி உள்ளது. "5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்பதால், மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    English summary
    The EC has informed that the Lok Sabha election results will be delayed by 5 hours due to VVPAT voting machine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X