டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி இந்த 20 மாநிலங்களுக்கும் ஒரே அவசர உதவி எண்.. அழையுங்கள் 112

அவசர கால உதவிக்கு நாடு முழுவதும் ஒரே எண் (112) திட்டம்.. 20 மாநிலங்கள் இணைந்தன

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் அவசர கால உதவிக்கு ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தில் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. நமது நாட்டில் அவசர காலங்களில் போலீஸ் உதவியை நாடுவதற்கு 100, தீயணைப்பு துறைக்கு, 101 என தனித்தனி தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளன

ஆனால் பல்வேறு வெளிநாடுகளில் அனைத்து வகையான அவசர உதவிகளுக்கும் ஒரே எண் தான் அமலில் உள்ளது. இந்த விஷயத்தில் வெளிநாடுகளைப் போல, நம் நாட்டிலும் ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

The Emergency Assistance No.112 scheme 20 states joined

இதன்படி 112 என்ற ஒரே எண்ணை அனைத்து அவசர உதவிகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் எழுந்தன

எனினும் முதற்கட்டமாக இமாச்சல், ஆந்திரா, உத்தரகண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழகம், குஜராத், ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட 20 மாநிலங்கள், இந்ததிட்டத்தில் இணைந்துள்ளன.

அதேபோல் புதுவை உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத் தில் இணைந்துள்ளன மேலும் மொபைல் போன்களில், 112 என்ற எண் உள்ள, தனி, பட்டன் வசதியை ஏற்படுத்தும்படி மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்களில் உள்ள GPS வசதி மூலம், அவசர கால அழைப்பு, எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.சாதாரண மொபைல் போன்கள் வைத்திருப்போர், 5 அல்லது 6 ஆகிய எண்களை தொடர்ந்து அழுத்துவதன் மூலம்,அவசர கால உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Twenty States have joined the plan to call the same number of emergency services across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X