டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சமயத்தில்...மக்களுக்கு உதவிய தமிழக எம்பிக்கள் இவங்கதானாம்...உங்க தொகுதி எம்பியானு பாருங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தின்போது மக்களுக்கு அதிகம் உதவிய மக்களவை எம்.பி.க்களைக கண்டறியும் சர்வேயை கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.

மொத்தம் 25 பேர் கொண்ட இந்த எம்பிக்கள் பட்டியலில் மத்தியப் பிரதேச பாஜக எம்பி அனில் பிரோஜியா 77 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 70 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

திமுகவைச் சேர்ந்த சென்னை தெற்கு தொகுதி எம்.பி டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் 63 புள்ளிகள் பெற்று 9வது இடத்தைப் பிடித்துள்ளார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் இந்த பட்டியலில் உள்ளார்.

அதிரடி சர்வே

அதிரடி சர்வே

கொரோனா போன்ற ஒரு தொற்று நோய் வருங்காலத்தில் ஏற்பட்டால் அதற்காக பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டிய நிலை வந்தால், அதற்கு நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதைக் கண்டறிய தலைநகர் டெல்லியை தலைமையிடமாக கொண்ட கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் நிறுவனம், ஆய்வு நடத்தியது. அதற்காக கொரோனா ஊரடங்கின் பொதுமக்களுக்கு அதிகம் உதவிய எம்.பி.க்களைக் கண்டுபிடிக்க 2020 அக்டோபர் 1ம் தேதி ஒரு சர்வேவைத் தொடங்கியது. அந்த சர்வே முடிவுகளை கவர்ன் ஐ நிறுவனம் தனது www.governeye.co.in/survey/result இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சிறந்த எம்பிக்கள்

சிறந்த எம்பிக்கள்

அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு:-
இந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரையில் 512 மக்களவை எம்.பி.க்களுக்காக மொத்தம் 33,82,560 பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் சிறந்த 25 எம்.பி.க்கள் கள நேர்காணல் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

முதல் இடம் யார்?

முதல் இடம் யார்?

இந்த 25 எம்.பி.க்களின் தொகுதிகளில் கள நேர்காணல்கள் செய்த பிறகு, முதல் 10 எம்.பி.க்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 77 புள்ளிகளுடன் மத்தியப் பிரதேச பாஜக எம்பி அனில் பிரோஜியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி அதலா பிரபாகர ரெட்டி (74 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி (70 புள்ளிகள்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அட இவரும் இருக்காரா?

அட இவரும் இருக்காரா?

மேற்கு வங்கதத்தின் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா( 68 புள்ளிகள்) 4 வது இடத்தையும், கர்நாடகா எம்பி பாஜகவின் எல்.எஸ்.தேஜஸ்வி சூர்யா ( 67 புள்ளிகள்) 5வது இடத்தையும்,மகாஷ்டிரா எம்பி சிவசேனாவின் ஹேமந்த் துக்காரம் கோட்சே ( 66 புள்ளிகள்) 6வது இடத்தையும், பஞ்சாப் எம்பி சுக்பீர் சிங் பாதல் ( 65 புள்ளிகள்) 7வது இடத்தையும், மத்தியப் பிரதேச பாஜக எம்பி சங்கர் லால்வானி (64 புள்ளிகள்) 8 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழக எம்பி ஒருவர் முதல் 10 இடத்தில் உள்ளார். அதாவது திமுகவைச் சேர்ந்த சென்னை தெற்கு தொகுதி எம்.பி டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் ( 63 புள்ளிகள்) 9வது இடத்தைப் பிடித்துள்ளார். மகாராஷ்டிரா பாஜக எம்பி நிதின் ஜெய்ராம் கட்கரி( 61 புள்ளிகள்) 10வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் தமிழகத்தின் சிவகங்கை தொகுதி எம்பியான காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் இந்த 25 பேர் பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.

பாஜக எம்பிக்கள்

பாஜக எம்பிக்கள்

இந்த 25 எம்பிக்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் இந்தஎம்பிக்கள்தான். அவர்களின் பட்டியல் பின்வருமாறு
மவுலானா பத்ருதீன் அஜ்மல் - துப்ரி, அசாம் (அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி), சுக்பீர் சிங் பாதல் - பெரோஸ்பூர், பஞ்சாப் (எஸ்ஏடி), ஓம் பிர்லா - கோட்டா, ராஜஸ்தான் (பாஜக), வினோத் சவ்தா - கச், குஜராத் (பாஜக), கார்த்தி சிதம்பரம் - சிவகங்கை தமிழ்நாடு (காங்கிரஸ்), டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் - சென்னை தெற்கு, தமிழ்நாடு (திமுக), அனில் பிரோஜியா - உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம் (பாஜக),

இவர்களும் உண்டு

இவர்களும் உண்டு

நிதின் ஜெய்ராம் கட்கரி - நாக்பூர், மகாராஷ்டிரா (பாஜக), ராகுல் காந்தி - வயநாடு, கேரளா (காங்கிரஸ்),
ஹேமந்த் துக்காரம் கோட்சே - நாசிக், மராட்டியம் (சிவசேனா), விஜய் குமார் ஹன்ஸ்டாக் - ராஜ்மஹால், ஜார்க்கண்ட் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சவுத்ரி மெஹபூப் அலி கைசர் - ககாரியா, பீகார் (லோக் ஜன சக்தி)

ஆதிக்கம்

ஆதிக்கம்

அப்துல் காலிக் - பார்பேடா, அஸ்ஸாம் (காங்கிரஸ்), விஜய் குமார் - கயா, பீகார் ( ஐக்கிய ஜனதா தளம்),
மோகன்பாய் கல்யாண்ஜி குண்டாரியா - ராஜ்கோட், குஜராத் (பாஜக), சங்கர் லால்வாணி - இந்தூர், மத்தியப் பிரதேசம் ( பாஜக), சதாசிவ கிசன் லோகண்டே - ஷீரடி, மகாராஷ்டிரா (சிவசேனா), மஹுவா மொய்த்ரா - கிருஷ்ணாநகர், மேற்கு வங்கம் (திரிணாமூல் காங்கிரஸ்),மாலூக் நாகர் - பிஜ்னோர், உத்தரபிரதேசம் (பகுஜன் சமாஜ் கட்சி), ரவி சங்கர் பிரசாத் - பாட்னா சாஹிப், பீகார் (பாஜக), அதலா பிரபாகர ரெட்டி - நெல்லூர், ஆந்திரப் பிரதேசம் (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி),

பரவாயில்லையே

பரவாயில்லையே

சையத் இம்தியாஸ் ஜலீல் - அவுரங்காபாத், மராட்டியம் (அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன்), எல்.எஸ். தேஜஸ்வி - பெங்களூரு தெற்கு, கர்நாடகா (பாஜக), டாக்டர் சஷி தரூர் - திருவனந்தபுரம், கேரளா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் - அசாம்கர், உத்தரபிரதேசம் (சமாஜ்வாடி கட்சி).

English summary
Government Eye Systems has announced the results of a survey to identify Lok Sabha MPs who helped the people the most during the corona virus freeze
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X