டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம குட் நியூஸ்.. இந்த ஆண்டு இறுதிக்குள்.. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி.. மத்திய அரசு நம்பிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த வருட இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Recommended Video

    Corona Vaccine முதல் டோஸ்க்கு பின் இறப்பு விகிதம் குறைகிறது.. Italy-ன் ஆய்வில் தகவல்

    இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
    தினமும் 3,50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 3,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

    கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

    தடுப்பூசி பேராயுதம்

    தடுப்பூசி பேராயுதம்

    கோவோக்சின், கோவிஷில்டு என்ற 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதலில் மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அரசு நம்பிக்கை

    அரசு நம்பிக்கை

    ஆனால் போதிய தடுப்பூசிகள் இல்லாததால் அந்த திட்டம் தொடங்கவில்லை. இந்த நிலையில் இந்த வருட இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ''இந்த வருட டிசம்பருக்குள் சுமார் 95 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும். இலக்கை அடைய முடியும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது'' என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

    இலக்கு நிர்ணயம்

    இலக்கு நிர்ணயம்

    மே மாதத்தில் 8.5 கோடி, ஜூன் மாதத்தில் 10 கோடி, ஜூலை மாதம் 15 கோடி, ஆகஸ்டில் 36 கோடி, செப்டம்பரில் 50 கோடி, அக்டோபரில் 56 கோடி, 59 கோடி நவம்பரில் மற்றும் டிசம்பரில் 65 கோடி. தடுப்பூசிகள் போட வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-V தடுப்பூசி மே மாதத்தில் 60 லட்சம் டோஸ்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவோக்சின் , கோவிஷீல்டு

    கோவோக்சின் , கோவிஷீல்டு

    ஜூன் மாதத்தில் 1 கோடி டோஸ்களும், ஜூலையில் 2.5 கோடி டோஸ்களும், ஆகஸ்டில் 1.6 கோடி டோஸ்களும் பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் கோவோக்சின் தடுப்பூசி, கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    The federal government hopes that everyone will be vaccinated by the end of this year
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X