டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜேஎன்யூ தாக்குதலில் திருப்பம்.. முகமூடி அணிந்த பெண்ணை அடையாளம் கண்ட போலீஸ்.. ஒப்புக்கொண்ட ஏபிவிபி!

ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இவர் பெயர் கோமல் சர்மா என்றும், இவர் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தையே நிகழ்த்தினார்கள்.

ஜேஎன்யூவில் மாணவர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான வீடியோ ஆதாரங்கள்வெளியானது. இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

தலைசுத்திருச்சு.. சுயமரியாதைக்காரனே திமுகக்காரன்.. ரஜினியை கலாய்த்து உதயநிதி மாஸ் பொங்கல் வாழ்த்து!தலைசுத்திருச்சு.. சுயமரியாதைக்காரனே திமுகக்காரன்.. ரஜினியை கலாய்த்து உதயநிதி மாஸ் பொங்கல் வாழ்த்து!

என்ன யார்

ஜேஎன்யூவில் இடதுசாரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தற்போது இணையத்தில் முக்கிய ஆதாரங்கள் வெளியானது. இதில் ஜேஎன்யூவில் சில மாணவிகளும் உள்ளே புகுந்து மாணவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதிலும் சிவப்பு சட்டை போட்ட இந்த பெண் , கையில் கத்தி வைத்துக்கொண்டு சக மாணவர்களை மிரட்டி உள்ளார்.

என்ன அடையலாம்

என்ன அடையலாம்

இந்த நிலையில் இவரின் அடையாளத்தை டெல்லி போலீஸ் கண்டிபிடித்துள்ளது . இந்த சிவப்பு சட்டை அணிந்த பெண் கோமல் சர்மா. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர் என்ற உண்மை வெளியாகி உள்ளது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் டாவ்லாட் ராம் கல்லூரியை சேர்ந்தவர்.

தலைமறைவு

தலைமறைவு

இந்த நிலையில் தற்போது கோமல் சர்மா தலைமறைவாகி உள்ளார். இவரை போலீஸ் மூன்று முறை அழைத்தும் கூட, இன்னும் போலீசிடம் ஆஜராகவில்லை. இவரின் அடையாளத்தை தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக ஏபிவிபி டெல்லி செயலாளர் சித்தார்த் யாதவ் பேட்டி அளித்துள்ளார்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

சித்தார்த் யாதவ் தனது பேட்டியில், கோமல் சர்மா எங்கள் அமைப்பை சேர்ந்தவர்தான். அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள். அவர் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கிறார் என்பது மட்டும்தான் எங்களுக்கு தெரியும்.

முடியவில்லை

முடியவில்லை

ஆனால் அதற்கு பின் அவரை எங்களால் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து விசாரிக்க வேண்டும். அவருக்கு எதிரான சாதியை முறியடிக்க வேண்டும். எங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்களும் இதில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். எங்கள் அமைப்பும் இது தொடர்பாக உள் விசாரணை நடத்தி வருகிறது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The girl in the red shirt: JNU attacker found by Police, ABVP accepts the guilty finally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X