டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசின் வரலாற்று நிகழ்வுகள்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பிய 4 கேள்விகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kannan Gopinathan asks question to Modi | மோடி அரசுக்கு கண்ணன் கோபிநாதன் எழுப்பிய கேள்விகள்

    டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்கு வரலாற்று நிகழ்வுகள் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். ஐஏஎஸ் அதிகாரியான இவர் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதியின் ஆட்சியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் பிரச்சனையை சுட்டிக்காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இது குறித்து கண்ணன் கோபிநாத் 'குரல் இருந்தும் கொடுக்க முடியாதவர்களுக்கு, குரலாக செயல்படவே இப்பணியில் சேர்ந்தேன். ஆனால், என் சொந்த குரலையே இழந்துவிட்டேன். மக்களுக்காக நான் சுதந்திரமாக பணியில் ஈடுபட முடிவதில்லை. இதன் காரணமாகவே ராஜினாமா செய்தேன் என்றார்.

    பஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்!பஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்!

    நான்கு கேள்விகள்

    நான்கு கேள்விகள்

    இந்நிலையில் சமூக பிரச்சனைகள் தொடர்பாக அவ்வப்போது தனது டுவிட்டர் பக்ககத்தில் கருத்து பதிவிட்டு வரும் கண்ணன் கோபிநாத், இன்று நான்கு கேள்விகளை எழுப்பி உள்ளார். வரலாற்று நிகழ்வுகள் என்ற பெயரில் ஐந்து கேள்விகளை கண்ணன் கோபிநாத் எழுப்பி உள்ளார். அவற்றை இப்போது பார்க்கலாம்.

     நாகா அமைதி ஒப்பந்தம்

    நாகா அமைதி ஒப்பந்தம்

    2015 ம் ஆண்டு நாகா அமைதி ஒப்பந்தம் (மத்திய அரசு மேற்கொண்டது) வடகிழக்கு பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதா! இல்லையா?

    2016ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இந்தியா கருப்பு பணம் இல்லாமல் போய்விட்டதா! இல்லையா?

    ஆர்ட்டிகல் 370

    ஆர்ட்டிகல் 370

    2017 ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி (நாடு முழுவதும்) கொண்டுவரப்பட்டது- இதன் மூலம் இந்தியாவில் ஓர் நள்ளிரவில் பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டதா! இல்லையா?

    2019ம் ஆண்டு அரசியல் சாசன பிரிவு 370வது ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் நாம் ஒருங்கிணைந்துவிட்டோமோ இல்லையா?

    நான்கு கேள்விகள்

    இவ்வாறு நான்கு கேள்விகளை கண்ணன் கோபிநாதன் கேட்டுள்ளார். இந்த கேள்விகள் தொடர்பாக செய்திகளையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து கேட்டுள்ளார். அவர் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் வரலாற்று நிகழ்வுகள் என்று தான் அனைத்து செய்திகளிலும் வந்துள்ளது. அந்த செய்திகளில் உள்ளபடி நடந்துவிட்டதா என்றும் கண்ணன் கோபிநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

    English summary
    The history of historic moments: former IAS officer Kannan Gopinathan asked four questions about historic moments of pm modi govt decision
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X