டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி!

பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளில் எப்படி மழை நீர் சேகரிப்பது என்று தமிழகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது, அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளில் எப்படி மழை நீர் சேகரிப்பது என்று தமிழகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது, அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றத்திலிருந்து மாதம் ஒருமுறை மான் கி பாத்'' நிகழ்ச்சி மூலம் மக்களிடம் வானோலியில் உரையாற்றுவார். பொதுவாக 30 நிமிடம் பிரதமர் மோடி இதில் பேசுவார். அரசியல் இல்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களிடம் மோடி இதில் பேசுவது வழக்கம்.

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படி மோடி பேசுவது வழக்கம். அந்த வகையில் இன்று குடியரசுத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மான் கி பாத்தில் பேசினார்.

உரை

உரை

பிரதமர் மோடி தனது உரையில், 2020ல் முதல்முறையாக மான் கி பாத் மூலம் மக்கள் முன்னிலையில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இதயம் கணிந்த குடியரசுத் தின வாழ்த்துக்கள். மான் கி பாத்தில் இன்று நாம் புதிய விஷயங்களை பேசலாம். நம் நாடும், நாட்டு மக்களும் பல சாதனைகளை கடந்த வருடம் செய்தனர். அதை நாம் இப்போது நினைவு கூற வேண்டும். அவர்களை கொண்டாட வேண்டும்.

மிகவும் நல்லது

மிகவும் நல்லது

மான் கி பாத் மிகவும் நன்றாக சென்று கொன்று இருக்கிறது. மக்கள் இதை ரசித்து கேட்கிறார்கள். உங்களிடம் நான் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மான் கி பாத் மூலம் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இரண்டு முன்தான் பிஹு, பொங்கல், லோஹ்ரி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாடினார்கள்.

இரண்டு வாரம்

இரண்டு வாரம்

கடந்த இரண்டு வாரம் முன்தான் ப்ரூ இன மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் வழங்கப்பட்டது. அடுத்த வருடம் கேளோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் எனப்படும் விளையாட்டு போட்டிகள் புவனேஷ்வரில் நடக்க உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விளையாட்டு துறை வேகமாக வளரும். தேசிய அளவில் இதனால் புதிய விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். புதிய திறமைகள் கொண்ட வீரர்கள் இதனால் நாட்டிற்கு கிடைப்பார்கள்.

இந்தியா

இந்தியா

தமிழகம் இந்தியாவிற்கு நிறைய வித்தியாசமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளில் எப்படி மழை நீர் சேகரிப்பது என்று தமிழகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ஆழ்துளை கிணறுகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க இது உதவும். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கவும் முடிவும். தண்ணீர் தேவையை இது குறைக்கும். அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
A very innovative idea of harnessing a borewell for rainwater harvesting sprung up from Tamilnadu says PM Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X