கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்.. இன்று சற்றே குறைந்த கொரோனா பாதிப்பு! குழப்பம் தரும் பாதிப்பு எண்ணிக்கை..!
டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் மாறி மாறி பதிவாகி வரும் நிலையில் இன்றும் பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. நேற்று 18 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 17 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.
வேகமாக பரவும் BA4 கொரோனா.. மத்திய அரசு கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்.. தமிழகத்திற்கு லாக்டவுன் வருமா?

கொரோனா பாதிப்பு
இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமாக மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 18 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 17 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது. இந்நிலையில்தான் இன்று பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.

மீண்டும் உயர்வு
நேற்று முன்தினம் சுமார் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நேற்று 11 ஆயிரத்துக்கு மேலே அதாவது, 18 ஆயிரத்து 819 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று 17 ஆயிரத்து 70 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 69 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை
கொரோனா காரணமாக 23 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14 ஆயிரத்து 413 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 36 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 7 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 197 கோடியே 64 லட்சத்து 19 ஆயிரத்து 915 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 101 கோடியே 66 லட்சத்து 61 ஆயிரத்து 694 முதல் டோஸ் தடுப்பூசியும், 91 கோடியோ 51 லட்சத்து 10 ஆயிரத்து 241 இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 4 கோடியோ 46 லட்சத்து 47 ஆயிரத்து 980 டோஸ் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.