டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இஸ்ரோ இறங்கியும் முடியலையா? இன்றாவது தகவல் வருமா மாயமான விமானத்திற்காக காத்திருக்கும் உறவினர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    13 பேருடன் காணாமல் போன இந்திய விமானம்...விமானத்திற்காக காத்திருக்கும் உறவினர்கள்!- வீடியோ

    டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் 13 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி 5வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3 ஆம் தேதி அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

    ஆனால் விமானம் சென்று சேர வேண்டிய நேரத்தை தாண்டியும் மென்சுகா விமானப்படை தளத்துக்கு வரவில்லை. விமானத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.

    தன்னை எம்பியாக்கிய வயநாடு மக்களுக்கு.. இன்று வந்து ராகுல் காந்தி தரப்போகும் சர்ப்பைரஸ் தன்னை எம்பியாக்கிய வயநாடு மக்களுக்கு.. இன்று வந்து ராகுல் காந்தி தரப்போகும் சர்ப்பைரஸ்

    இந்தோ - திபெத் பாதுகாப்பு படை

    இந்தோ - திபெத் பாதுகாப்பு படை

    விமானப் படையின் சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இறங்கிய இஸ்ரோ

    இறங்கிய இஸ்ரோ

    ஆனால் விமானத்தை தேடும் பணியில் 2 நாட்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ இறங்கியது.

    5 நாட்கள் ஆகியும் தகவல் இல்லை

    5 நாட்கள் ஆகியும் தகவல் இல்லை

    இஸ்ரோவின் ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் மூலமாக விமானத்தை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் விமானம் மாயமாகி இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    அரசுக்கு கோரிக்கை

    அரசுக்கு கோரிக்கை

    இதனால் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    2 சீட்டா ஹெலிகாப்டர்கள்

    2 சீட்டா ஹெலிகாப்டர்கள்

    இந்நிலையில் இன்று 5வது நாளாக விமானத்தை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று விமானப்படையின் 2 சீட்டா ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

    சென்சார், செயற்கைக்கோள்கள்

    சென்சார், செயற்கைக்கோள்கள்

    மேலும் C130 விமானம், ஹெலிகாப்டர்கள், மற்றும் சிறப்பு சென்சார்கள் மற்றும் செயற்கைக்கோள்களை சுமக்கும் விமானங்களும் இன்று தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அனைத்து சிவில், போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் சென்சார் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் பணியை அதிகரித்துள்ளதாக விமானப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    காத்திருக்கும் உறவினர்கள்

    காத்திருக்கும் உறவினர்கள்

    இந்த விமானங்கள் இரவு நேரத்திலும் தேடுதல் பணியை தொடரும் என்றும் விமானப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் இன்றாவது விமானம் குறித்த தகவல் கிடைக்குமா என காத்திருக்கின்றனர் விமானத்தோடு மாயமானவர்களின் குடும்பத்தினர்.

    English summary
    The Indian Air force intensified its search operation on Missing AN-32 aircraft.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X