டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை சர்ச்சைக்கு மத்தியில், இந்திய இராணுவம் அமெரிக்காவிடமிருந்து 72000 சிக் 716 ரக துப்பாக்கிகளை வாங்க ஆர்டர் கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்தியாவிற்கு 72000 துப்பாக்கிகளை அமெரிக்கா கொடுத்துவிட்டது. இந்த துப்பாக்கிகள் வடக்கு கமாண்ட் மற்றும் பிற செயல்பாட்டு பகுதிகளில் உள்ள வீரர்களின் பயன்பாட்டிற்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக 72000 துப்பாக்கிகள் வாங்க ஆர்டர்கள் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு துறை வட்டாரங்கள், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும் போது. "ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரங்களின் கீழ் இந்த 72,000 க்கும் அதிகமான துப்பாக்கிகளை வாங்க ஆர்டர்களை நாங்கள் வழங்க உள்ளோம்" என்று தெரிவித்தன.

சென்னை கற்றுக்கொடுத்த வித்தை.. சீனாவின் அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் இந்தியா.. பை பை பெய்ஜிங்!சென்னை கற்றுக்கொடுத்த வித்தை.. சீனாவின் அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் இந்தியா.. பை பை பெய்ஜிங்!

சிக் சாவர் துப்பாக்கிகள்

சிக் சாவர் துப்பாக்கிகள்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக இந்திய ராணுவம், அமெரிக்காவின் இந்த 'சிக் சாவர் தாக்குதல்' ரக துப்பாக்கிகளை முதன்முதலில் பெற்றது. ஃபாஸ்ட் டிராக் கொள்முதல் (எஃப்.டி.பி) திட்டத்தின் கீழ் இந்தியா துப்பாக்கிகளை வாங்கியது. தற்போது இந்திய சிறிய ஆயுத அமைப்பால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் (Insas) 5.56x45 மிமீ துப்பாக்கிகளை மாற்றாக இந்த புதிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லை பாதுகாப்பு படைக்கு

எல்லை பாதுகாப்பு படைக்கு

மத்திய அரசின் திட்டத்தின் படி, சுமார் 1.5 லட்சம் இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கிகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், எல்லை கட்டுபபாடு கோடு பகுதியில் உள்ள (எல்.ஓ.சி) ராணுவ வீரர்களுக்கும் தரப்பட உள்ளது. மீதமுள்ள படைகளுக்கு ஏ.கே.-203 துப்பாக்கிகள் வழங்கப்படும், அவை இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து அமேதி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன.

16,000 லைட் மெஷின் துப்பாக்கிகள்

16,000 லைட் மெஷின் துப்பாக்கிகள்

இந்தியா மற்றும் ரஷ்யா என இரு தரப்பினரும் எதிர்கொள்ளும் பல நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்திய இராணுவம் பல ஆண்டுகளாக தங்களது நிலையான ஐஎன்எஸ்ஏஎஸ் தாக்குதல் துப்பாக்கிகளை மாற்ற முயற்சித்தாலும் ஏதாவது ஒரு காரணத்தால் முயற்சிகள் தோல்வியடைந்து வருகின்றன. சமீபத்தில், பாதுகாப்பு அமைச்சகம் துப்பாக்கிகளின் பற்றாக்குறையை நீக்க இஸ்ரேலில் இருந்து 16,000 லைட் மெஷின் துப்பாக்கிகள் (எல்எம்ஜி) வாங்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பி.எல்.ஆர் சிஸ்டம்ஸ் என்ற கூட்டு முயற்சியில் இஸ்ரேல் ஆயுத அமைப்பு (ஐ.டபிள்யூ.ஐ) 2017 ஆம் ஆண்டில் ஒரு ஆலை மத்திய பிரதேசத்தில் அமைத்திருந்தது. இந்நிலையில் ‘மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ் இங்கு இஸ்ரேலின் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.

படைகள் வாபஸ்

படைகள் வாபஸ்

தற்போதைய நிலையில் கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன, ஏனெனில் சீன இராணுவம் தனது 20,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை மே முதல் வாரம் முதல் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வெளியேற்றியது. இந்தியாவும் படைகளை வெளியேற்றி வருகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவிடமிருந்து 72.000 'சிக் 716 தாக்குதல்' ரக துப்பாகிகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

English summary
Amid the ongoing dispute with China over boundary issue, Indian Army to order 2nd batch of 72,000 Sig Sauer 716 American assault rifles
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X