• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தியாகிகள்.. சர்ச்சையை கிளப்பும் இஸ்லாமிய மதகுரு

Google Oneindia Tamil News

டெல்லி : பட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தியாகிகள் எனவும், அவர்களுக்கு தியாகிகள் அந்தஸ்த்தை வழங்க வேண்டும் என இஸ்லாமிய மதகுருவும், இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான மௌலானா தௌக்கீர் ரசா கான் சர்ச்சையை கிளப்பியுள்ளார்

கடந்த 2008 செப்டம்பர் 13-ம்தேதி டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அடுத்த 6 நாட்களில் பட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகளும் காவல் ஆய்வாளர் மோகன் சந்த் சர்மாவும் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடை பெற்றது. போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆரிஸ் கான், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி ஷாஜாத் அகமது, ஆடிப் அமீன் மற்றும் முகமது சஜித் ஆகியோரின் பெயர் இடம்பெற்றிருந்தது..

அதிகாரிகளின் அலட்சியம்.. பெங்களூரில் நடு வானில் நேருக்கு நேர் மோதவிருந்த 2 விமானங்கள்.. ஜஸ்ட் மிஸ்அதிகாரிகளின் அலட்சியம்.. பெங்களூரில் நடு வானில் நேருக்கு நேர் மோதவிருந்த 2 விமானங்கள்.. ஜஸ்ட் மிஸ்

பட்லா ஹவுஸ் என்கவுண்டர்

பட்லா ஹவுஸ் என்கவுண்டர்

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், என்கவுன்ட்டரின் போது காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் ஆரிஸ்கான் உள்ளிட்டோர் மீதான குற்றச் சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள் ளன எனவும், பட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவைக் கொலை செய்த குற்றவாளி ஆரிஸ்கானுக்கு மரண தண்டனை விதித்து டெல்லி செசனஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

சர்ச்சையை கிளப்பிய மதகுரு

சர்ச்சையை கிளப்பிய மதகுரு

இந்நிலையில் பட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் கொல்லப்பட்டவர்கள் தியாகிகள் எனவும், அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என இஸ்லாமிய மதகுருவும், இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவர் மௌலானா தௌக்கீர் ரசா கான் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்துக்களை குறிவைத்து பேசிய மௌலானா தௌக்கீர் ரசா கான், பட்லா ஹவுஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும், 2009ல் தங்கள் அரசு அமைந்தால் பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்துவோம் என காங்கிரஸ் தன்னிடம் கூறியது எனவும், ஒருவேளை விசாரணை நடந்திருந்தால் பயங்கரவாதிகளாக கொல்லப்பட்டவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதை உலகம் அறிந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.

எதிராக பேசியதாக புகார்

எதிராக பேசியதாக புகார்

வரவிருக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் இஸ்லாமிய மதகுருவான மௌலானா தௌக்கீர் ரசா கானின் இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சிலுக்கு தனது ஆதரவை வழங்கியதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.ஏனெலில் கடந்த காலங்களில் இந்து சமூகத்தை அவமதிக்கும் வகையில் கான் பேசி மிரட்டல் விடுத்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேசியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக குற்றச்சாட்டு

பாஜக குற்றச்சாட்டு

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக சாடிய நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா பேசுகையில், கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும் கட்சிகளுடன் காங்கிரஸ் கடந்த காலங்களில் கூட்டணி வைத்திருந்த நிலையில், பெரும்பான்மை சமூகத்தை குறிவைத்து வகுப்புவாத கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
Maulana Tauqeer Raza Khan, chairman of the itihad-e-Millat Council, has sparked controversy by calling the martyrs killed in the Badla House encounter case and placing statues on them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion