டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்!

    டெல்லி: நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 9மணி நேரமாக அதிகரிக்க மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், தொழிலாளர் ஊதிய விதிமுறை வரைவு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

    நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் தொழிலாளர்களுக்கான ஊதிய விதிமுறை குறித்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலை நேரம் தற்போது 8 மணி நேரமாக உள்ள நிலையில் அதனை 9மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    உங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி? இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க!உங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி? இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க!

    மக்கள் தொகைப்படி

    மக்கள் தொகைப்படி

    இந்த அறிக்கையில் நாடு முழுவதும் ஒரே குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது அல்லது குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரிப்பது குறித்து எந்த தகவலும் அந்த அறிக்கையில் இல்லை. அதேநேரம் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க மக்கள் தொகையை கணக்கில் கொண்டு 3 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது.

    நகரம் எது

    நகரம் எது

    அதன்படி 40லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி மாநகரமாகவும், 10 முதல் 40 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதி நகர்பகுதியாகவும், மற்றவை கிராமப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ செலவு

    மருத்துவ செலவு

    எரிபொருள், மின்சாரம், பிறசெலவுகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 20 சதவீதமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான படிப்பு, மருத்துவ செலவுகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 சதவீதமாக இருக்க வேண்டும். வீட்டு வாடகை 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கருத்துக்கள்

    பொதுமக்கள் கருத்துக்கள்

    இந்த அறிக்கை குறித்து டிசம்பர் 1ம் தேதிக்குள் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நாளைக்கு 375 ரூபாய்

    ஒரு நாளைக்கு 375 ரூபாய்

    இதனிடையே தொழிலாளர் அமைச்சக குழு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2018ம் ஆண்டு ஜுலை வரையிலான கணக்கீட்டின்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 375 ரூபாய் ஆக இருக்க வேண்டும். அதாவது 9,750 ரூபாய் ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    English summary
    The labour ministry has suggested nine-hour regular working day in its draft wage code as against eight hours now but stayed away from fixing a national minimum wage
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X