டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடுப்பூசிகள் கொரோனா வராமல் 94% பாதுகாக்கிறது.. உயிரிழப்பு ஆபத்தையும் குறைக்கிறது - மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: தடுப்பூசி கொரோனா தொற்று வராமல் 94% பாதுகாக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    நாட்டில் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    The Ministry of Health says the vaccine protects against 94% of corona infections

    இதன் பின்னர், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசியே மிகப்பெரிய ஆயுதம் என்று மக்கள் நம்பி வருகின்றனர்.

    தடுப்பூசி 94 சதவீதம் நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பை அளிக்கிறது என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி மக்களை மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் 75-80% குறைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார.

    தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுவதற்கான வாய்ப்பு சுமார் 8 சதவிகிதம் என்றும், தடுப்பூசி போட்ட நபர்களில் 6 சதவீதம் பேருக்கே அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். கொரோனா வகைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்றும் புதிய மாறுபாடு வருவதற்கு முன்பு அதைத் தவிர்க்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் வி.கே. பால் தெரிவித்தார்.

    English summary
    The federal Ministry of Health says the vaccine protects against 94% of corona infections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X