இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் சதி?16 யூடியூப் சேனல்களை முடக்கிய அரசு
டெல்லி : இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 6 சேனல்கள் உட்பட 16 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது.
மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கடந்த சில மதங்களாக அரசுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடும் வகையில் செயல்படும் யூட்யூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை முடக்கி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான பிரச்சாரங்களை சில யூட்யூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பரப்பி வருவது கண்டறியப்பட்டது.
நீட் பிஜி தேர்வை ஒத்திவைங்க! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

யூட்யூப் சேனல்கள்
மேலும் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தினரை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விட முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் இணையத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலி செய்திகளை பரப்பியதற்காக 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு இன்று முடக்கியதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 6 சேனல்கள் பாகிஸ்தானை சேர்ந்தவை ஆகும்.

திடீர் முடக்கம்
மேலும் 16 யூடியூப் சேனல்களை தடை செய்துள்ள நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முன்னதாக இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதற்காக இந்த மாதத்தில் 22 யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது. மேலும் 20 சேனல்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தடை செய்யப்பட்டன.

பாகிஸ்தான் சேனல்கள்
தடை செய்யப்பட்ட சில சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் 16 சேனல்கள் முடக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை ஒடுக்க, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அளித்துள்ள தகவல்களின் படி, இந்த சேனல்கள் இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளன

அதிரடி நடவடிக்கை
தடைசெய்யப்பட்ட யூடியூப் சேனல்களில் ஒன்று தஹாஃபுஸ்-இ-டீன் இந்தியா என்ற சேனல் 7 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களையும் 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் கொண்டுள்ளது. லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் இந்து என்று பல பொய்களை அந்த சேனல் சமீப காலமாக பரப்பியது. ஹனுமான் ஜெயந்தியின் போது போபாலில் ஷோபா யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்த ஹிந்துக்களையும் இந்த சேனல் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டது போன்ற பல வகுப்புவாத செய்திகளை விளம்பரப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.