• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

உலக நாடுகளின் 'ரெட்' லிஸ்டில் இந்தியா.. இதுக்கு மூல காரணம் மகாராஷ்டிராவின் விதர்பா.. ஏன் தெரியுமா?

|

டெல்லி: மகாராஷ்டிராவின் விதர்பா நகரில் தாக்கம் ஏற்படுத்தி வரும் B.1.617 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள புதிய மரபணு மாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகிறது.

இதனால் மகாராஷ்டிராவின் விதர்பா இப்போது சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மைய புள்ளியாக மாறி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,00,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் தீயாய் பரவும் கொரோனா: லாக்டவுனுக்கு நிகரான கடும் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் மகாராஷ்டிராவில் தீயாய் பரவும் கொரோனா: லாக்டவுனுக்கு நிகரான கடும் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

 மகாராஷ்டிரா முதலிடம்

மகாராஷ்டிரா முதலிடம்

இந்தியாவில் கொரோனா அதிக பாதிப்புக்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது மகாராஷ்டிரா மாநிலமாகும். நாட்டிலேயே தினசரி பாதிப்பு(60,000-க்கும் மேற்பட்ட பாதிப்பு) மற்றும் தினசரி உயிரிழப்பில் மகாராஷ்டிராதான் முதலிடம் பிடித்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரும் இன்னொரு ஷாக் நியூஸ் ''எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது''போல் அமைந்துள்ளது.

அதிர்ச்சி தரும் அறிக்கை

அதிர்ச்சி தரும் அறிக்கை

அதாவது மகாராஷ்டிராவின் விதர்பா நகரில் தாக்கம் ஏற்படுத்தி வரும் B.1.617 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள புதிய மரபணு மாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் பற்றிய செய்திதான் அது. இந்த இரட்டை மரபணு மாற்றமடைந்த வைரஸ் முதலில் மகாராஷ்டிராவின் அமராவதியில் தோன்றியது. பின்னர் பிப்ரவரி மாதத்தில் அருகிலுள்ள மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க எழுச்சி பெற்றது என்று டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியன் வைரஸ்

இந்தியன் வைரஸ்

'இந்தியன் வைரஸ்' என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் இங்கிலாந்து, ஆப்பிரிக்கா அல்லது பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட வைரஸில் இருந்து மிகவும் வேறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவின் விதர்பா இப்போது சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மைய புள்ளியாக மாறி உள்ளது. இந்த இரட்டை மரபணு மாற்றமடைந்த வைரஸ்( B.1.617 ) வேகமாக பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி திறனில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது என எச்சரிக்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) மூத்த விஞ்ஞானி டாக்டர் அபர்ணா முகர்ஜி.

தீவிரமான வைரஸ்

தீவிரமான வைரஸ்

eGlobal Initiative (GSAID) இன் தரவுகளின்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் B.1.617 வைரஸ் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் நிலவும் இந்த வைரஸ் மாறுபாடு குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவின் டாக்டர் அதுல் கவாண்டே '' இது மிகவும் தீவிரமான தொற்று வைரஸாக தெரிகிறது. இது மிகவும் பயமுறுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

ரெட் லிஸ்டில் இந்தியா

ரெட் லிஸ்டில் இந்தியா

இந்தியாவின் இந்த புதிய வைரஸ் இரட்டை மாறுபாடு முந்தைய வைரஸ் வடிவத்தை விட 20% அதிகமாக பரவக்கூடியது என்று குயின்ஸ் பல்கலைக்கழகம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஹாங்காங் போன்ற பல நாடுகள் இந்தியாவை 'ரெட்' லிஸ்ட் வகையில் பயணிக்கச் சேர்த்துள்ளன, அதே நேரத்தில் மாறுபாடு வைரசை கருத்தில் கொண்டு, முற்றிலும் தடுப்பூசி போடப்பட்டாலும் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தங்களது நாட்டு மக்களை அறிவுறுத்தியது.

 தடுப்பூசி என்னும் பேராயுதம்

தடுப்பூசி என்னும் பேராயுதம்

இப்படி ஒருபக்கம் நமக்கு பீதியை கிளப்பும் தகவல்கள் ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு புறம் மகிழ்ச்சி தகவலை கொண்டு வந்து சேர்க்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்( ஐசிஎம்ஆர்) அதாவது இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் கோவாக்சின் தடுப்பூசி இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரசுக்கு எதிராக திறப்பட செயல்பட்டு, அந்த வைரஸை முறியடிக்கும் திறன் கொண்டது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. எனவே ''கொரோனா வைரஸ் எந்த வடிவில் வந்து நம்மை அச்சறுத்தினாலும் அதனை முறியடிக்க தடுப்பூசி போட்டுக் கொள்வோம். கொரோனாவின் கொடிய பிடியில் இருந்து விரைவில் மீண்டு விடுவோம்''.

English summary
The new genetically modified corona virus, classified as B.1.617, is spreading like wildfire in Vidarbha, Maharashtra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X