டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடைசியாக அந்த அப்டேட் வந்துடுச்சு.. இனி நிம்மதிதான்.. மார்க் வெளியிட்ட அதிரடி வாட்ஸ் ஆப் அப்டேட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Whatsapp New Update: வாட்ஸ் ஆப்பில் கடைசியாக அந்த அப்டேட் வந்துடுச்சு- வீடியோ

    டெல்லி: வாட்ஸ் ஆப்பில் புதிய அதிரடி அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. வாட்ஸ் ஆப் நீண்ட நாட்களுக்கு பின் வெளியிட்டு இருக்கும் பெரிய அப்டேட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    லோக்சபா தேர்தலுக்காக கட்சியினர் எல்லோரும் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். அதேபோல்தான் வாட்ஸ் ஆப் நிறுவன ஊழியர்களும் தீவிரமாக உழைத்து ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    தேவையில்லாத அரசியல் பிரச்சார குரூப்களில் மக்களை இணைப்பதை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் ஒரு அப்டேட்டை இறக்கி உள்ளது. மிக பாதுகாப்பான வழிகளில் இந்த அப்டேட் கோடிங் செய்யப்பட்டு உள்ளது.

    வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான்.. முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான்.. முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி

    முன்பு எப்படி

    முன்பு எப்படி

    முன்பெல்லாம் வாட்ஸ் ஆப்களில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் குரூப்களில் இணைக்கலாம். நீங்கள் நினைத்தால் உங்களிடம் ஒருவரின் போன் நம்பர் இருந்தால் அவர் உங்களை எந்த குரூப்பிலும் இணைக்கலாம். நீங்கள் விருப்பம் இல்லை என்றால் அதிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்பதே வழக்கமாக இருந்தது.

    இப்போது எப்படி

    இப்போது எப்படி

    இந்த நிலையில் இப்போது புதிதாக இதில் கட்டுப்பாடு கொண்டு வரும் வகையில் அப்டேட் இறக்கப்பட்டு உள்ளது. அதன்படி உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் இனி வாட்ஸ் ஆப்பில் சேர்க்க முடியாது. உங்களை ஒரு குழுவில் சேர்க்க வேண்டும் என்றால் உங்கள் முழு அனுமதி இனி தேவைப்படும். இதை நீங்கள் ஆப் செய்தும் வைத்துக் கொள்ள முடியும்.

    முறை என்ன

    முறை என்ன

    புதிய முறைப்படி உங்கள் வாட்ஸ் ஆப்பில் உள்ள ''settings'' க்கு சென்று ''group'' என்ற பகுதியில் "nobody," "my contacts," "everyone'' இந்த மூன்றில் எதையாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி,

    "nobody,"யை தேர்வு செய்தால் உங்களை யார் குழுவில் இணைக்க நினைத்தாலும் உங்களிடம் மெசேஜ் மூலம் லிங்க் அனுப்பி அனுமதி பெற வேண்டும். இதற்கு அவர் தனியாக உங்களிடம் மெசேஜ் அனுப்ப வேண்டும்.

    "my contacts," - இதை தேர்வு செய்தால், உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களை குழுக்களில் இணைக்க முடியும். இதற்கு அந்த நண்பரின் போன் எண்ணை நீங்கள் சேவ் செய்திருக்க வேண்டும்.

    "everyone." - இதை தேர்வு செய்தால் யார் வேண்டுமானாலும் எப்போதும் போல உங்களை குழுக்களில் இணைக்கலாம்.

    கடைசி மிக முக்கியம்

    கடைசி மிக முக்கியம்

    இது மட்டுமில்லாமல் இந்த அப்டேட்டிலும் பார்வேர்ட் மெசேஜ்களுக்கான கட்டுப்பாடு 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதை மீறி பார்வேர்ட் செய்ய நினைப்பவர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பை கருதி இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

    English summary
    The new update in WhatsApp allows people can decide who adds them in WA groups.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X