டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா காலத்தில் குறைந்த பொருளாதார குற்றங்கள்.. 2020ல் 12 சதவீதம் சரிவு- குற்ற ஆவண காப்பகம்

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) 2020க்கான குற்றப் புள்ளி விவர அறிக்கையின்படி, பொருளாதார குற்றங்களின் வழக்குகள் முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் 12 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டில் 145,754 என்ற அளவுக்கு இருந்தது இருந்த பொருளாதார குற்றங்கள் 2020ல் 12 சதவீதம் குறைந்து 145,754 ஆக குறைந்துள்ளது.

போலி, ஏமாற்றுதல் மற்றும் மோசடி வழக்குகள் இதில் 88 சதவிகிதம். அதாவது 127,724 கேஸ்களுக்கு காரணமாக இருந்துள்ளது.

கொலை குற்றம் பதிவுசெய்ய வேண்டும்..தடுப்பூசி உற்பத்தியில் முழுதிறனை பயன்படுத்தவில்லை..ஐகோர்ட் காட்டம்

ராஜஸ்தானில் அதிகம்

ராஜஸ்தானில் அதிகம்

ராஜஸ்தானில் 2020ம் ஆண்டில் 18,528 பொருளாதாரக் குற்றங்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் 16,708; தெலுங்கானா, 12,985; மகாராஷ்டிரா, 12,453; மற்றும் அசாம், 9,884 என பதிவாகியுள்ளன. நாட்டில் பதிவான அனைத்து வழக்குகளிலும் இந்த ஐந்து மாநிலங்கள் 48 சதவிகிதம் வகிக்கின்றன.

விகிதாச்சாரம்

விகிதாச்சாரம்

இருப்பினும், 100,000 மக்கள்தொகைக்கு இத்தனை குற்றங்கள்.. என்ற விகிதத்தின்படி கணக்கிடப்பட்ட பொருளாதார குற்றங்களின் அடிப்படையில் தெலுங்கானா 34.6 சதவீதத்துடன் டாப் வரிசையில் உள்ளது. அதைத் தொடர்ந்து அசாம், 28.4; கேரளா, 25.8; ராஜஸ்தான், 23.6; மற்றும் ஹரியானா, 23.2 என்று பதிவாகியுள்ளன. இந்தியாவின் மொத்த குற்ற நடவடிக்கைகளில் பொருளாதார குற்றங்களின் விகிதம் 10.8 என்ற அளவில் உள்ளது.

விசாரணையில் புதுச்சேரி டாப்

விசாரணையில் புதுச்சேரி டாப்

2020ம் ஆண்டில் நாடு முழுவதும் பொருளாதார குற்றங்களுக்காக 118,965 பேர் கைது செய்யப்பட்டனர். பொருளாதார குற்றங்களுக்காக 97.9 சதவிகிதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த மாநிலமாக புதுச்சேரி உள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், 77; மற்றும் மத்திய பிரதேசம், 76.2 என்ற அளவில் உள்ளன. இந்தியாவின் குற்றப்பத்திரிகை விகிதம் 53.5 ஆக உள்ளது.

 குறைந்த குற்றப் பத்திரிக்கைகள்

குறைந்த குற்றப் பத்திரிக்கைகள்

மேகாலயா போன்ற மாநிலங்கள், 9.4, ராஜஸ்தான், 15.4; மற்றும் அசாம், 20.8 ஆகியவை குறைந்த குற்றப்பத்திரிகை விகிதங்களுடன் உள்ளன. அதாவது வழக்கு பதிவு செய்து பிறகு குற்றப் பத்திரிக்கை அளவுக்கு இவை செல்லாத மாநிலங்களாக உள்ளன. சமீபத்தில், டெல்லி காவல்துறை காப்பீடு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பொருளாதார குற்றவாளிகளின் கும்பலை கைது செய்திருந்தது. 54 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை 1.15 கோடி ரூபாய் மதிப்புக்கு இந்த கும்பல் ஏமாற்றியிருந்தது. செப்டம்பர் 5ம் தேதி, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ரான்பாக்ஸியின் முன்னாள் விளம்பரதாரரான ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கை 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்தது.

நகரங்கள் எப்படி?

நகரங்கள் எப்படி?

20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில், டெல்லி நகரம் 2020ம் ஆண்டில் 4,445 பொருளாதாரக் குற்றங்களைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து மும்பை, 3,927; ஹைதராபாத், 3,427; ஜெய்ப்பூர், 3,217; மற்றும் லக்னோ, 2,224 ஆகியவை குற்றங்களை பதிவு செய்துள்ளன. மொத்தத்தில், 19 பெருநகர நகரங்களில் 2020ம் ஆண்டில் 26,970 பொருளாதார குற்றங்கள் பதிவாகியுள்ளன, இது 2019ல் பதிவான 33,979 என்ற அளவிலிருந்து 21 சதவிகிதம் குறைவாகும்.

English summary
According to the National Crime Records Bureau (NCRP)'s crime statistics report for 2020, the number of cases of economic crimes has dropped by 12 percent compared to the previous year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X