ஏறுது இறங்குது ரிப்பீட்டு.. ஏறுது இறங்குது ரிப்பீட்டு..இந்தியாவில் ஆட்டம் காட்டும் கொரோனா பாதிப்பு
டெல்லி : கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக பதிவாகி வந்த நிலையில், நேற்றைவிட இன்றும் பாதிப்பு சற்றே குறைந்துள்ளது. நேற்று சுமார் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சுமார் 2 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.
டெல்டா, டெல்டா ப்ளஸ் , ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டி? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் இது தான்!

இந்தியாவில் கொரோனா
அதே வேகத்தில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா நியூசிலாந்து என பல்வேறு நாடுகளுக்கும் பரவிய வைரஸ் தற்போது இந்தியாவில் பரவியுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா 3வது அலையும் தொடங்கியது. ஜனவரி முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த பாதிப்பு அடுத்த நாட்களில் லட்சக்கணக்கை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த சில தினங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வருகிறது.

பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,51,209 புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையான 2.86 லட்சத்தை விட சுமார் 30 ஆயிரம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக 627 புதிய இறப்புகளும் பாதிவாகியுள்ள நிலையில் , தற்பொதைய நிலவரப்படி நாடு முழுவதும் வைரஸ் தொடர்பான இறப்பு எண்ணிக்கையை 4,92,327 ஆக அதிகரித்துள்ளனது.

டெல்லி மும்பையில் பாதிப்பு
சுமார் 21 லட்சம் பேர் தற்போது கொரோனாவுக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது மொத்த எண்ணிக்கையில் 5.18 சதவிகிதம் ஆக உள்ளதாகவும், நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை 93.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 19.59 சதவீதத்திலிருந்து 15.88 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வாராந்திர நேர்மறை விகிதம் 17.47 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி எண்ணிக்கை
கொரோனாவுக்காக நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 164.4 கோடி அளவைத் தாண்டியுள்ளது. முதல் டோஸ் 89.1 கோடி பேருக்கும், இரண்டாவது டோஸ் 69.9 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக நாட்டின் தடுப்பூசி குறித்த தகவல்களை அளிக்கும் கோவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் கால அளவை நீட்டித்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடாக மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.