டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவை முந்திய பலி எண்ணிக்கை.. 8 நாளில் கொரோனா செம வேகம்.. இந்தியாவில் மறுபடி முழு ஊரடங்குதான் வழி?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில், நேற்றுவரையிலான நிலவரப்படி கொரோனா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை 1.6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 9வது இடத்திற்கு இந்தியாவை கொண்டு சென்றுள்ளது.

மேலும், கொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை சீனாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி லாக்டவுனை அமல்படுத்தியது. முதலில் மார்ச் 25ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதுவரை இல்லாத உச்சம்.. திணறும் தமிழகம்.. ஒரே நாளில் 827 கொரோனா கேஸ்கள்.. 20 ஆயிரத்தை நெருங்குகிறது! இதுவரை இல்லாத உச்சம்.. திணறும் தமிழகம்.. ஒரே நாளில் 827 கொரோனா கேஸ்கள்.. 20 ஆயிரத்தை நெருங்குகிறது!

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

அப்போது இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் இந்தியா மிகப்பெரிய பாதிப்பிலிருந்து தப்பியதாக உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்தது. பிறகு, ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து மே 3-ம் தேதி வரை 2ம் கட்டமாக 19 நாட்கள், ஊரடங்கை அமல்படுத்தியது. மத்திய அரசு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளுக்கு அனுமதி அளித்தது.

16 நாட்களில் 10 ஆயிரம்

16 நாட்களில் 10 ஆயிரம்

அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் மார்ச் 15ம் தேதி வரை 110 பேருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதியிலிருந்து மார்ச் 15ம் தேதி வரை 100ஐ தாண்ட 45 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் மார்ச் 29ம் தேதி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 100 என்ற எண்ணிக்கையிலிருந்து 1000த்தை. ஆயிரமாவது கேஸை தொட 14 நாட்கள் தேவைப்பட்டது. அடுத்த 16 நாட்களுக்குள் அதாவது, ஏப்ரல் 14ம் தேதி வரை 10 ஆயிரத்தை கடந்தது. இதற்கு 16 நாட்கள்தான் தேவைப்பட்டது.

அதிக வேகம்

அதிக வேகம்

மே 7ம் தேதி கேஸ்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. இதற்கு 23 நாட்கள் தேவைப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் அடுத்த 12 நாட்களுக்கும் அதாவது மே 19ம் தேதி ஒரு லட்சத்தை கடந்துள்ளது. 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் கேஸ்களாக உயர 23 நாட்களான நிலையில், ஒரு லட்சத்தை தொட 12 நாட்கள்தான் ஆனது. ஆனால் ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சத்தை தொட வெறும் 8 நாட்களே ஆகியுள்ளது. மே 19ம் தேதியில் இருந்து 27ம் தேதிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும், 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Recommended Video

    கொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி
    கடும் ஊரடங்கு

    கடும் ஊரடங்கு

    10 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரையில் கொரோனா தொற்று இருக்கும்போது பலி எண்ணிக்கையின் சதவீதம் 3க்கு மேலும், தற்போது, பலி எண்ணிக்கை சதவீதம் 2.86 ஆகவும் உள்ளது. பொதுப் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு இன்னும் வேகமாக பரவும் அச்சம் உள்ளது. இப்படியே நிலைமை போனால், மறுபடியும் ஆரம்ப காலகட்டத்தை போல கடுமையான ஊரடங்கை பிறப்பிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். ஆனால், தொழில்கள் நசிவடைந்துள்ள நிலையில், அதையும் செய்ய முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. எனவே, வைரசோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டியதுதான் ஒரே வழி என்ற நிலை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை நெருக்கமும், கல்வியறிவு அதிகமில்லா மக்களை கணிசமாக கொண்ட நாட்டில், வைரசோடு வாழப் பழகுவது சாத்தியமா என்பதே இப்போதுள்ள கேள்வி.

    English summary
    In India, as of yesterday, the number of coronavirus cases has exceeded 1.6 lakh. India has been ranked 9th among the worst affected countries by Corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X