• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"விஸ்வரூபம்".. செல்போன் ஒட்டுக்கேட்பு உண்மையா.. "போட்டி" காரணமா.. ஜூலை 28ம் தேதி வருகிறது விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: "பெகாசஸ்" விவகாரம் விஸ்வரூபமெடுக்கிறது.. இந்தியாவின் மிக முக்கிய அரசியல் பிரமுகர்களின் செல்போன் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.

  How does the Pegasus spyware hack into someones phone?| Explained

  இஸ்ரேல் நாட்டில் என்எஸ்ஓ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது... இந்த நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருளை தயாரித்துள்ளது..

  இதன்மூலம் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள் போன்றோரின் பர்சனல் செல்போன்கள் பேச்சினை ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், உளவு பார்க்கப்பட்டதாகவும் பகீர் புகார், வாஷிங்டன் டைம்ஸ், தி வயர் உள்ளிட்ட முன்னணி மீடியாக்களில் வெளியானது.. இதை பார்த்து உலக தலைவர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர்.

   ராகுல்காந்தி

  ராகுல்காந்தி

  இந்தியாவிலும் ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர், உள்ளிட்ட 2 மத்திய அமைச்சர்கள், திரிணமூல்காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட அரசியல்வாதிகளின் செல்போன்களும், 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் செல்போன்களும் மத்திய அரசால் உளவு பார்க்கப்பட்டதாக தெரிகிறது. அவர்களின் போன்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

   பரபரப்பு

  பரபரப்பு

  இந்த செய்தி வெளியானதுமே ஒருவித பரபரப்பு இந்தியா முழுவதும் தொற்றிக் கொண்டுள்ளது.. தினம்தோறும் பல்வேறு விவாதங்கள் இதுகுறித்து எழுந்து வருகின்றன.. ஆனால், இந்தகுற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருவதுடன், இந்தியாவின் வளர்ச்சியை முடக்கும் சர்வதேச சதிச்செயல் என்று சொல்லி வருகிறது.. அன்று முதல்நாள் நாடாளுமன்றம் கூடியதுமே, இந்த விவகாரத்தை, எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன...

  அமளி

  அமளி

  இதற்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையிலும் விளக்கம் அளித்தார்.. ஆனாலும் எதிர்க்கட்சிகள் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை.. இந்த விவகாரத்தில் உண்மையை வெளிப்படுத்தும் வரை நாங்கள் அமைதியாக இருக்க போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக சொல்லிவிட்டன. இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு முடங்கிவிட்டன.. ஆனால், மத்திய அரசோ, இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்து வருகிறது.

  விசாரணை

  விசாரணை

  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு (தகவல் தொழில் நுட்பம்) வரும் 28-ம் தேதி கூடி ஆலோசனை நடத்த போகிறது.. அப்போது, உண்மையிலேயே தலைவர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதா? உளவு பார்க்கப்பட்டதா? என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளிடம் அந்தக்குழு விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  விளக்கம்

  விளக்கம்

  இதுகுறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சசிதரூர் பேட்டி தந்திருக்கிறார்.. அதில், "பெகாசஸ் உளவு விவகாரமானது, தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்... இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கத்தை தர வேண்டும்.. இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருப்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. இந்த உளவு விவகாரத்தில் தங்களுக்கு சம்பந்தமில்லை மத்திய அரசு சொல்கிறது, அப்படியென்றால், வேறு எந்த நாட்டு அரசுக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் இந்த விஷயம் தீவிர பிரச்சனையாக உருவெடுக்கும்" என்றார்.

  English summary
  The Pegasus case is set for a July 28th hearing
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X