டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மக்களவை தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் மக்களவை தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ள காரணத்தால், தமிழகத்தில் மக்களவை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என ரமேஷ் முதலில் கோரியிருந்தார். மக்களவை தேர்தலுக்காக ரூ 10,000 கோடிக்கு மேல் தமிழக வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

The petition to cancel the Lok Sabha elections in Tamil Nadu has been dismissed

எனவே தமிழகத்தில் மக்களவை தேர்தலை நியாயமாக நடத்த வாய்ப்பில்லாத சூழல் இருப்பதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என ரமேஷ் தரப்பு வாதிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் பதிலை அடுத்து, நடந்து முடிந்த மக்களவை தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுதாரரான கே.கே.ரமேஷ் கோரினார். ஆனால் ரமேஷின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு 'அல்வா', 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு 'அல்வா', 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என கூறி, ரமேஷின் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

English summary
The Supreme Court dismissed the petition to cancel the Lok Sabha elections in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X