டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தமாக நிறுத்தப்பட்ட ரூ.2000 நோட்டு அச்சடிப்பு.. புழக்கமும் குறையும்.. அதிர வைக்கும் காரணம்!

2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை அரசு நிறுத்தம்?- வீடியோ

    டெல்லி: 2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின் நிறைய திடுக்கிடும் காரணம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

    கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடியால் டிமானிடைசேஷன் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்போது வழக்கில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

    இது மக்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பல கோடி தொழிலாளர்களை, மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.

    2000 ரூபாய் நோட்டு

    2000 ரூபாய் நோட்டு

    இந்த நிலையில் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது. பிங்க் நிறத்தில் கொண்டு வரப்பட்ட இந்த நோட்டில் சிப் இருந்ததாக முதலில் வதந்திகள் பரவியது. அதேபோல் இதில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இதை கள்ள நோட்டு அடிக்க முடியாது என்றும் செய்திகள் வந்தது.

    மொத்தமாக நிறுத்தம்

    மொத்தமாக நிறுத்தம்

    இந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டு தயாரிக்கப்படுவது மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இனியும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாது என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

     திரும்ப பெறுகிறார்கள்

    திரும்ப பெறுகிறார்கள்

    அதேபோல் தற்போது வெளியே இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் ஆர்பிஐ வசம் வந்த பின், அதை வெளியே புழக்கத்திற்கு விட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால் 2000 ரூபாய் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது இருக்கும் 2000 ரூபாய் நோட்டு எப்போதும் போல செல்லுபடி ஆகும்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதை நிறுத்தியதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி இந்த நோட்டில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டை எளிதாக கள்ள நோட்டு அடிக்க முடிவதால் இதை பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    அட

    அட

    அதேபோல் 2000 ரூபாய் நோட்டு காரணமாக நிறைய பண பதுக்கல் செய்யப்படுவதும் தெரிய வந்துள்ளது. ஒரு கட்டில் எளிதாக ரூ.2 லட்சம் வரை வைக்க முடியும் என்பதால் இதை எளிதாக பதுக்குகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரிய பண புழக்க தட்டுப்பாடு வந்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

    அரிசி மூட்டை குடோன்லயே இருக்கலாம்

    அரிசி மூட்டை குடோன்லயே இருக்கலாம்

    பாதுகாப்பு கருதிதான் இந்த 2000 ரூபாய் நோட்டு வந்ததாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதிலேயே பாதுகாப்பு இல்லை என்று கூறி உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தானம் காமெடியில் வருவது போல.. இதுக்கு அந்த அரிசி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் மிஸ்டர் மோடிஜி!

    English summary
    The printing and circulation of 2000 Rs notes have been stopped by Reserve Bank Of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X