டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் மிகமோசமான நிலையில் காற்றின் தரம்.. நடவடிக்கை எடுத்தும் பலனில்லை.! விழிபிதுங்கும் மக்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே தொடர்ந்து உள்ளதாக, சபர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாகன புகை அதிகரிப்பு, அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் அவ்வப்போது குறைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவு புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து செய்யப்படுகிறது.

The quality of the air very worst in Delhi.. action taken was not effective

ஆனாலும் காற்று மாசு குறையவில்லை. மத்திய அரசின் கீழ் செயல்படும் சபர் வானிலை மையம் கூறியுள்ள தகவலில் காற்றின் தரத்தை உறுதிசெய்யும் அளவுகோலில், காற்றுத் தரக் குறியீடு எண் 339 என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசம் என்கிற பிரிவின்கீழ் வரும்.

காற்றின் தரக் குறியீட்டைப் பொறுத்தவரை 0 - 50 நல்லது என எடுத்து கொள்ளப்படுகிறது. 51 - 100 திருப்தியான நிலை என்றும், 101 - 200 பரவாயில்லை என்றும், 201 - 300 வரையிலான அளவீட்டை மோசம் என்றும், 301 - 400 மிக மோசம் என்றும், 401 - 500 என்ற அளவு பதிவானால் ஆபத்து என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

The quality of the air very worst in Delhi.. action taken was not effective

தேசியளவில் ஆண்டு தோறும் சுமார் 15 லட்சம் மக்கள் காற்று மாசினால் இறப்பதாகவும், காற்று மாசுபாடு தான் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லி எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரபிக் கடலிலிருந்து ஈரப்பதம் இருந்து காற்று வயதின் காரணமாக வடமேற்கு இந்தியாவில் அதிகமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்லி உட்பட வட மேற்கு இந்திய பகுதிகளில் இடி மற்றும் குறிப்புகள் திடீரென சில பகுதிகளில் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது

English summary
According to the Met department, the quality of the air in the country's capital Delhi is still worse
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X