டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை குறைக்கவே அதிக கட்டணம் வசூல்... கட்டண உயர்வுக்கு ரயில்வே கொடுக்கும் விளக்கத்தை பாருங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வீண் ரயில்பயணத்தை தடுக்கவே, குறுகிய தூர ரயில்களுக்கு சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    டிக்கெட் உயர்வுக்கு இதான் காரணம்.. ரயில்வே கொடுத்த விளக்கம்

    பல பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றம் செய்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு வசூலிக்கப்படுகிறது.

    The railways have explained short-distance trains will be charged extra to control covid 19

    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்ததால் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்பு தளர்வுகள் அளிக்கப்பட்டு நீண்ட தூரம் செல்லும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்பின்னர் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. இதனையடுத்து குறுகிய தொலைவு செல்லும் ரயில்களும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. பல பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றம் செய்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு வசூலிக்கப்படுகிறது. இந்த சுமை தினசரி வேலைக்கு செல்லும் தொழிலார்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மீது விழுந்தது. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் இந்த கட்டண அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

    கொங்கு மண்டலத்திற்கு சூப்பர் அறிவிப்பு.. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6683 கோடி ஒதுக்கீடு கொங்கு மண்டலத்திற்கு சூப்பர் அறிவிப்பு.. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6683 கோடி ஒதுக்கீடு

    கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும்தொடர்கிறது. சில மாநிலங்களில் திடீரென உயர்ந்துள்ளது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வீண் ரயில்பயணத்தை தடுக்கவே, சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெயில் மற்றும்எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான கட்டணம், இந்த சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்படுகிறது. தேவையில்லாத பயணத்தை தவிர்க்கவும்" என்று கூறியுள்ளார். நல்லவேளையாக புறநகர் மின்சார ரயில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விற்கும் நிலையில் இதையும் அதிகரித்து இருந்தால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சில ரயில் பயணிகள் தெரிவித்தனர்.

    English summary
    The railways have explained that short-distance trains will be charged extra to prevent wasted train travel in order to control the corona
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X