டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அசாருதின் கேப்டனாக இருந்திருக்கிறார்.. இதுதான் இந்தியா.. ஆனால் பாகிஸ்தான்.. கௌதம் கம்பீர் ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஒரு இந்து என்ற காரணத்திற்காக அந்த அணியின் சில வீரர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்பது "பாகிஸ்தானின் உண்மையான முகத்தை" காட்டுகிறது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் இன்று கூறினார்.

பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ஓர் இந்து என்பதால் சக கிரிக்கெட் வீரர்களால் அவர் நியாயமற்ற முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் கருத்து தெரிவித்துள்ளார்.

டேனிஷ் தங்களுடன் உணவு சாப்பிடும்போதும் சரி, தங்களுடைய மேஜையிலிருந்து உணவை பகிரும்போதும் சரி அணியின் கேப்டன் புருவங்களை உயர்த்துவார் என்றும் சோயப் அக்தர் தெரிவித்தார்.பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் மதபாகுபாடு.. அக்தர், கனேரியா பேட்டி.. கையில் எடுத்தது பாஜக.. காங்கிரசுக்கு கேள்வி கிரிக்கெட்டில் மதபாகுபாடு.. அக்தர், கனேரியா பேட்டி.. கையில் எடுத்தது பாஜக.. காங்கிரசுக்கு கேள்வி

உண்மைதான்

உண்மைதான்

சோயிப் அக்தருக்கு நன்றி தெரிவித்துள்ள டேனிஷ் கனேரியா, தான் இந்து என்பதால் சக பாகிஸ்தான் வீரர்கள் தன்னுடன் பேச மறுத்தது உண்மை தான் என்றும், முன்னதாக அவர்களின் பெயரை வெளியிட தனக்கு தைரியம் இல்லை என்றும இப்போது துணிச்சல் வந்திருப்பதால் விரைவில் அந்த வீரர்களின் பெயர்களை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அசாருதீன் கேப்டன்

அசாருதீன் கேப்டன்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா "ஒரு இந்து என்ற காரணத்திற்காக ஒரு அந்த அணியின் சில வீரர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டிருக்கிறார். ஆனால் இந்திய அணியை முகமது அசாருதீன் போன்ற முஸ்லீம் கேப்டன்கள் நீண்ட காலம் வழிநடத்தி இருக்கிறார்கள். இந்து கிரிக்கெட் வீரருக்கு பாரபட்சம் என்பது ஒரு கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான் கான் தலைமையிலான நாட்டில் நடந்திருக்கிறது .

சித்ரவதை

சித்ரவதை

இத்தகைய சித்ரவதைகளை எதிர்கொண்டு கனேரியா தனது நாட்டிற்காக (பாகிஸ்தான்) டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார் என்றால் அது வெட்கக்கேடானது.

பாக் முகம் இதுதான்

பாக் முகம் இதுதான்

முகமது கைஃப், இர்பான் பதான், முனாஃப் படேல் ஆகியோருக்கு இந்தியா இவ்வளவு மரியாதை கொடுத்தது. உண்மையில், படேல் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் எப்போதும் இந்திய நாட்டை பெருமைப்படுத்த இணைந்து அணியில் விளையாடினோம். ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் உண்மையில் துரதிர்ஷ்டவசமானவை. இது பாகிஸ்தானின் உண்மையான முகத்தை காட்டுகிறது. இந்த ஒரு நிகழ்வின் மூலமே "இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் பாகிஸ்தானில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை கற்பனை செய்து பார்த்துவிட முடியும்". என்றார்..

English summary
BJP MP and former cricketer Gautam Gambhir on Pakistani cricketer Danish Kaneria's comment: he was mistreated by a few teammates for being a Hindu showed the "real face of Pakistan"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X