டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவின் அமர்க்கள வெற்றிக்கு காரணம் என்ன? நீங்கள் நினைப்பது இதுதானா

Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் வெற்றிக்கு பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கு சில காரணங்கள் மட்டுமே கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

நடந்த முடிந்த 17 வது மக்களவைத் தேர்தலில், 303 இடங்களில் வென்று தனிபெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வருகிற 30 ம் தேதி, பிரதமராக பதவியேற்க உள்ளார்.

கடந்த 23 ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. 350 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றின. காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களே மட்டுமே தக்கவைத்தது. இதனால், விரக்கியில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு ராகுல் காந்தி சென்றதாக கூறப்பட்டது.

ஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்

பிரதம வேட்பாளர் யார்?

பிரதம வேட்பாளர் யார்?

இந்தநிலையில், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அடிமட்ட தொண்டன் வரை எடுத்து செல்லாதது. சரியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பை தவற விட்டது. ராகுல் காந்தி தான், பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிலை படுத்தாதது. மோடி அரசின் திட்டங்களால் ஏற்ப்பட்ட விளைவுகள் பற்றி, மக்களின் முன் சரியாக எடுத்து வைக்காதது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விளம்பர யுக்தி

விளம்பர யுக்தி

மோடியை எதிர்ப்பதில் மட்டுமே ராகுலின் பங்கு இருந்தது. எதிர்கால திட்டம் இல்லை மற்றும் அந்தந்த மாநிலத்தில் காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள். சமுக வலைதளத்தில் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பர யுக்திகளை சரியாக கையாளதது என்றும் கூறப்படுகிறது.

பழமையான கட்சி

பழமையான கட்சி

காங்கிரசில், அடித்தட்டு மக்கள் வரை செல்லும் கட்டமைப்பு இல்லை. காங்கிரஸ் என்றால் அது பழமையான கட்சி என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும். இனையதளத்தை முழுமையாக பயன்படுத்தி, கட்சியின் வரலாறு, கொள்கைகள், சாதனைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும் இது போன்ற சில விஷயங்களை சரிசெய்திருந்தாலே போதும், பாஜக வெற்றியில் 50 சதவீதத்தை தடுத்து இருக்காலம் என்றும் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் செய்த தவறு

காங்கிரஸ் செய்த தவறு

தோல்வியடைந்ததால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதில்லை. வெற்றி, தோல்வி யாருக்கும் நிரந்தரம் இல்லை. வருங்காலத்தை நமதாக்குவோம் என நினைத்து செயலாற்றினாலே போதும், பாதி வெற்றி கிடைத்துவிடும் என்றும், காலத்திற்கு ஏற்ப வியூகங்களையும் மாற்றி கொள்ள தவறினால், வெற்றி வாகை சூடமுடியாது, வெறும் கையோடு தான் செல்ல வேண்டும். பாஜகவின் பாதி வெற்றி என்பது, காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளால் வந்தது என்பதும் அநேகர்களின் பதிலாக உள்ளது.

English summary
BJP's Great Success: The Reason For the Failure of Congress Party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X