டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா, இலங்கை உறவு... ஆயிரம் ஆண்டுகள் பழமையானது... ராஜபக்சவிடம் மோடி புகழாரம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பிரதமர் மோடி ஆலோசனை காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார், இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், மீனவர்கள் குறித்து இருவரும் பேசி வருகின்றனர்.

முன்னதாக பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு உச்சி மாநாடு குறித்து பேசுவதற்கு நான் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி. பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கும் வாழ்த்துக்கள். இந்தியா, இலங்கை உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. வெளிநாட்டுக் கொள்கைகளின்படி எனது அரசு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் '' என்று தெரிவித்தார்.

The relations between India and Sri Lanka are thousands of years old Modi says to Rajapaksa

மோடிக்கு பதில் அளித்து பேசிய மகிந்த ராஜபக்ச, ''கொரோனா காலத்தில் மற்ற நாடுகளுக்கு இந்தியா பணியாற்றியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். எம்டி நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா ஒத்துழைப்பு நல்கியது. இது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வளர்க்க வாய்ப்பு அளித்தது'' என்று தெரிவித்தார்.

இவர்களது பேச்சில் இந்திய கடற்பரப்பு எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மகிந்த ராஜபக்ச பேசி வருகிறார்.

கடற்பரப்பு எல்லையை மீறி இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதால், இலங்கையைச் சேர்ந்த மீனவர்களுக்கு ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்து இருந்தார். இதனால் எல்லை கடந்து மீன்பிடிக்க வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச எச்சரிக்கையும் விடுத்து இருந்தார்.

English summary
The relations between India and Sri Lanka are thousands of years old Modi says to Rajapaksa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X