டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி வரி ரத்து.. மாஸ்க் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா மருந்துகள் மற்றும் சிகிச்சை தொடர்பான உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை மருந்து மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பிறகு, மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டா், சானிடைசர், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது தொடா்பாக ஆய்வு செய்வதற்கு, மேகாலய நிதியமைச்சா் கான்ராட் சங்மா தலைமையில் மாநில நிதியமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவில் கேரளா, உத்தர பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சா்கள் இடம் பெற்றிருந்த நிலையில், அக்குழு அளித்த அறிக்கை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன் பேட்டி

நிர்மலா சீதாராமன் பேட்டி

இதனிடையே, கூட்டத்தின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கூறியதாவது: மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய குழு, அளித்த பரிந்துரையை ஏற்று, கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், ஆம்போடெரிசின்-பி மருந்து மீதான ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது.

மாஸ்க் விலை குறைப்பு

மாஸ்க் விலை குறைப்பு

மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான, ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மாஸ்க், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

சானிடைசர் விலை குறைப்பு

சானிடைசர் விலை குறைப்பு

கொரோனா பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதம், சானிடைசர் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்கப்படுகிறது. எனவே மக்களுக்கு செலவு மிச்சமாகும்.

காய்ச்சல் பார்க்கும் கருவி

காய்ச்சல் பார்க்கும் கருவி

உடல் வெப்பம் பரிசோதிக்கும் கருவி மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

பல்ஸ் ஆக்சி மீட்டர்

பல்ஸ் ஆக்சி மீட்டர்

பல்ஸ் ஆக்சிமீட்டர் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

English summary
The Goods and Services Tax (GST) Council meeting is being held today under the chairmanship of Union Finance Minister Nirmala Sitharaman.The removal of the GST tax on drugs used to treat corona and black fungal infections is expected to be discussed at the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X