டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலையில் மட்டுமல்ல.. மற்ற கோயில்கள், மசூதிகளிலும் பெண்கள் செல்ல கட்டுப்பாடு.. ரஞ்சன் கோகாய்

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை மறு ஆய்வு வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் !

    டெல்லி: பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

    சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய காலம்காலமாக தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழையலாம் என கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஒரே தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள்.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு.. அதிரடி காட்டிய சந்திரசூட், நாரிமன்!ஒரே தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள்.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு.. அதிரடி காட்டிய சந்திரசூட், நாரிமன்!

     அரசியல் சாசன அமர்வு

    அரசியல் சாசன அமர்வு

    இந்த நிலையில் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரள அமைப்பு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இதன் மீதான தீர்ப்பை கோகாய் தலைமையிலான அமர்வு இன்று அளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

    சபரிமலை விவகாரம்

    சபரிமலை விவகாரம்

    அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில் பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு, பார்சி இன பெண்களுக்கான அனுமதி மறுப்பு, தாவூதி போரா முஸ்லீம் பெண்கள் வழக்கு ஆகியவை சபரிமலை விவகாரத்தை போன்றவையாகும்.

    அனுமதி

    அனுமதி

    எனவே சபரிமலை தீர்ப்பை இந்து மதத்திற்குள்பட்டதாக கருதக் கூடாது என்றார் கோகாய். சபரிமலை கோயிலில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படாததை போல் பார்சி இன பெண்களும், முஸ்லிம் பெண்களும், தாவூதி போரா முஸ்லீம் பெண்களும் அவரவர் கோயில்கள், மசூதிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

    டெல்லி

    டெல்லி

    பார்சி இனத்தவர்கள் நெருப்பை ஒரு வழிபாடாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். அவர்களுக்கான கோயில்கள் மும்பையிலும் இந்தியாவில் பிற இடங்களிலும் உலகில் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த கோயில்களுக்கு பார்சி இனத்தைச் சேர்ந்த பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது டெல்லி பார்சி அஞ்சுமான் என்ற அமைப்பானது ஆஜரானது.

    தனி இடம்

    தனி இடம்

    அந்த அமைப்பு கூறுகையில் உடலில் காயம் இருந்தாலோ ரத்தம் வந்தாலோ அவர்களை நெருப்பு கோயிலில் அனுமதிப்பதில்லை. இந்த விதி பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும்தான் பொருந்தும் என தெரிவித்தது. மசூதிகளில் பெண்கள் நுழைய அனுமதிப்பதில்லை. அதற்கு மாறாக ரம்ஜான் நாட்களில் தொழுகை பெண்களுக்கென தனி இடம் பல மசூதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

    போரா ஹாஜீரா

    போரா ஹாஜீரா

    அதுபோல் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தாவூதி போரா மக்களின் தர்காவான போரா ஹாஜீராவுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. தாவூதி போரா எனப்படுபவர்கள் உலகில் கோடீஸ்வர முஸ்லீம் சமூகத்தினர் ஆவர். இவர்களின் கலாச்சாரமே வேறு. இது போல் சபரிமலையில் மட்டும் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும் தர்காக்கள், மற்ற கோயில்களிலும் மாதவிடாயை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவதை தலைமை நீதிபதி இன்று சுட்டிக் காட்டினார்.

    English summary
    The Supreme Court bench notes that the entry of Muslim women in mosque, Parsi women case and Dawoodi Bora case are similar to issues in Sabrimala review case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X