டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிசு மரணம் குறைந்துள்ள மாநிலங்களில் இரண்டாமிடம் பிடித்த தமிழகம்.. ஆய்வறிக்கையில் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரசவத்தில் இறக்கும் குழந்தைகள் சதவீதம் இரண்டு புள்ளி குறைந்திருப்பதை அடுத்து சிசு மரணம் குறைந்துள்ள மாநிலங்களில், இரண்டாம் இடத்தை தமிழகம் மற்றும் டெல்லி மாநிலங்கள் பெற்றுள்ளன.

சிசு மரணம் குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 2017-ம் ஆண்டில் டெல்லி மாநிலத்தில் கணக்கிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, ஆயிரம் பிரசவங்களில் 16 சிசுக்கள் இறந்துள்ளன. இந்த எண்ணிக்கையானது 2016-ம் ஆண்டை காட்டிலும் 2 புள்ளிகள் குறைவாகும்.

The state of Tamil Nadu is the second one in the state where the baby dies

புள்ளி விவரங்களின்படி பிறந்தது முதல் வயது நிறைவடைவதற்குள் ஏற்படும் சிசு மரணங்கள் குறைவாக நிகழும் மாநிலங்கள் பட்டியலில் தலைநகதர் டெல்லி இரண்டாமிடம் பிடித்துள்ளது. ஆயிரம் குழந்தைகளுக்கு 16 குழந்தைகள் சிசு மரணம் என்ற விகிதத்தில், தேசிய அளவில் டெல்லி மற்றும் தமிழகம் இரு மாநிலங்களும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன.

தலைநகர் டெல்லியை பொறுத்த வரை கடந்த 5 ஆண்டுகளாகவே சிசு மரணம் குறைந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 24 சிசுக்கள் மரணித்து வந்த நிலையில், தற்போது வெகுவாக குறைந்து 16 என்ற விகிதத்தை அடைந்துள்ளது. மத்திய அரசின் இந்திர தனுஷ் சுகாதார இயக்கத்தால் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே, சிசு மரணங்கள் சதவிகிதம் குறைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதிலும் நிகழும் சிசு மரணத்தை கணக்கிட்டால் 1000 குழந்தைகளுக்கு 33 சிசுக்கள் மரணம் என்ற நிலை காணப்படுகிறது. இந்த விகிதமும் 2016ம் ஆண்டை காட்டிலும் ஒரு புள்ளி குறைந்திருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், மொத்தமாகவே சிசு மரணங்கள் குறைந்து வருவது சுகாதார வசதிகளில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதை தெளிவாக்குவதாக கூறப்பட்டுள்ளது.

இதெல்லாம் மனிதர்கள் போட்ட ஓட்டுங்க.. பேய்கள் ஓட்டு போடலை.. தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம் இதெல்லாம் மனிதர்கள் போட்ட ஓட்டுங்க.. பேய்கள் ஓட்டு போடலை.. தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்

மேலும் தாய் - சேய் மரணம், சிசு மரணம் ஆகியவற்றுக்கு குழந்தை திருமணமே பெரும்பாலும் காரணமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போதைய சூழலில் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், குழந்தை திருமணங்கள் கணிசமாக குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது

குழந்தை திருமணங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் கிராமப்புறங்களில் அதிகளவில் இன்னும் குழந்தை திருமணங்கள் நடப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் நடைபெறும் குழந்தை திருமணங்களின் சதவீதம் 14.1ஆகவும், நகர்புறங்களில் 6.9 சதவீதமாகவும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே சமயம் பிரசவத்தின் போது ஏற்படும் சிசு மரண விகிதம் 1000 பேருக்கு 20.2 என உள்ளது. 2016-ம் ஆண்டை ஒப்பிட்டால் இது 20.4 என்ற அளவிலிருந்து 0.2 சதவீதமே குறைந்துள்ளது. எனவே பிறப்பு விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பரிந்தரைக்கப்பட்டுள்ளது

English summary
In states where the death toll is below two per cent decrease in child mortality, Tamil Nadu and Delhi have been ranked second.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X