டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெற்காசியர்கள் மரபணுரீதியாக.. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட மாட்டார்கள்.. ஆய்வு முடிவில் தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: தெற்காசியர்கள் மரபணு ரீதியாக கடுமையான கொரோனா தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

தெற்காசிய மக்களிடையே கொரோனா பாதிப்புகளை நிர்ணயிப்பதில் டி.என்.ஏ பிரிவின் பங்கை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்துள்ளது.

டி.என்.ஏ ஆய்வு

டி.என்.ஏ ஆய்வு

சிலர் ஏன் மற்றவர்களை விட கடுமையான அறிகுறிகளையும் பாதகமான விளைவுகளையும் அனுபவிக்கிறார்கள் என்பதை அறிய தெற்காசிய மக்களிடையே கொரோனா பாதிப்புகளை தீர்மானிப்பதில் டி.என்.ஏ பிரிவின் பங்கை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது. தெற்காசியர்கள் மரபணு ரீதியாக கடுமையான கொரோனா தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் என்று இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

'கடுமையான கொரோனாவுக்கான முக்கிய மரபணு ஆபத்து காரணி தெற்காசிய மக்களிடையே எந்த தொடர்பையும் காட்டவில்லை' என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகள் கொரோனா பாதிப்புக்கு காரணியாகின்றன என்பது தெரியவந்தது.

இந்திய மக்கள்

இந்திய மக்கள்

''இந்த ஆய்வில் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்களை தெற்காசிய மரபணு தரவுகளுடன் மூன்று வெவ்வேறு காலக்கெடுவுடன் ஒப்பிட்டுள்ளோம். இந்தியா மற்றும் பங்களாதேஷ் மக்கள் தொகையை குறிப்பாக கவனித்துள்ளோம்'' என்று டி.என்.ஏ கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையத்தின் இயக்குனரும், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலின் மையத்தின் (சி.சி.எம்.பி) தலைமை விஞ்ஞானியுமான டாக்டர் தங்கராஜ் கூறினார்.

Recommended Video

    பிரதமர் Modi சொன்ன மூக்கில் செலுத்தும் Nasal Vaccine எப்படி செயல்படும்? முழு தகவல்
     பழங்குடி மக்கள்

    பழங்குடி மக்கள்

    கொரோனா தொடர்புடைய மரபணு மாறுபாடுகள் பங்களாதேஷில் பழங்குடி மக்களிடையே கணிசமாக வேறுபடுகின்றன என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.'' எங்கள் ஆய்வு முடிவு தெற்காசிய மக்களின் தனித்துவமான மரபணு தோற்றத்தை மீண்டும் வலியுறுத்துகிறது'' என்று ஆய்வின் முதல் ஆசிரியர் பிரஜிவல் பிரதாப் சிங் தெரிவித்தார்.

    English summary
    The study concludes that South Asians are not genetically predisposed to severe corona infection
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X