டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு!

Google Oneindia Tamil News

புதுடெல்லி: மாஸ்க் அணியவில்லை என்றால் அது உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிக்கும் என பொதுமக்களிடம் சுப்ரிம் கோர்ட் வலியுறுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தன போக்குடன் இருப்பதாகவும் சுப்ரிம் கோர்ட் சாடியுள்ளது.

கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள முகமூடிகளை அணிவது மற்றும் சமூக விலகல் குறித்த வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரிம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

The Supreme Court says most people do not wear a mask

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும், டெல்லி, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.கொரோனாவை தடுக்க மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற அரசு வலியுறுத்தி உள்ளது.

பெரும்பாலான மக்கள் இதனை கடைபிடிக்காததால் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவிலை என சுப்ரிம் கோர்ட் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

நாட்டில் பெரும்பாலான இடங்களில் மக்கள் கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடிப்பது இல்லை. சந்தைகள், மால்கள், திருமணங்கள் மற்றும் அனைத்து வகையான விழாக்களிலும் மாஸ்க் அணிவதில்லை.போலீசார், அரசு அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதிலை.

முகமூடி அணியாதவர்களால் அவர்களது உடலநிலை மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. மற்றவர்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்கள் பாதிக்கிறார்கள்.மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கு இடையூறாக உள்ளனர். எனவே மாநில அரசுகள் மக்கள் கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court has urged the public to be affected not only by yourself but also others if the mask is not worn
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X