டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் 20ஆம் தேதி தண்டனை விவரத்தை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

The Supreme Court says Senior Advocate Prashant Bhushan Guilty of Contempt

ஜூன் மாதம் 27ஆம் தேதி உச்சநீதிமன்றம் தொடர்பாகவும் ஜூன் 29-ஆம் தேதி தலைமை நீதிபதி பாப்டே தொடர்பாகவும் இருவேறு சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் வெளியிட்டிருந்தார் பிரசாந்த் பூஷன். இதையடுத்து பிரசாந்துக்கு உச்சநீதிமன்றம் ஜூலை 22ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி அனுப்பியது.

தனது தரப்பு பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருந்தார் பிரசாந்த் பூஷன். அதில் நீதித்துறையை களங்கப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றார். மேலும் தலைமை நீதிபதி பாப்டே நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீதுதான் அமர்ந்திருந்தார் என்பதை நான் கவனிக்காமல் தவறுதலாக ட்வீட் செய்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

ஊரே கொண்டாடுகிறது.. கமலா ஹாரிஸுக்கு மன்னார்குடியில் கட் அவுட் வைத்த கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?ஊரே கொண்டாடுகிறது.. கமலா ஹாரிஸுக்கு மன்னார்குடியில் கட் அவுட் வைத்த கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Recommended Video

    திமுகவில் மாற்றத்தை கொண்டுவரும் பிரஷாந்த் கிஷோர் | Oneindia Tamil

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகபட்சமாக 6 மாத காலம் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Supreme Court has held senior advocate Prashant Bhushan guilty of contempt of court for his tweets against Chief Justice of India SA Bobde and Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X