டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு.. ஷாக் நிலவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்து வருவதன் காரணமாக இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம், வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவாக உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களில், அமெரிக்கா மற்றும் பிரேசில் முறையே 9,979 மற்றும் 9,799 இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. ஆனால் இந்த நாடுகளை. ஒப்பிடுகையில், இதே காலகட்டத்தில் இந்தியா 13,418 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

The unusual surge in Indias daily Corona death toll

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 95,529 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இல்லாத அளவாக 1168 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 44,62,965 ஆக உள்ளது. இதுவரை, இந்தியாவில் மொத்தம் 75091 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, இந்த பூமியில் ஒவ்வொரு ஐந்தாவது கொரோனா வைரஸ் மரணம் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. தினசரி இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் முதல் இந்தியாவில் கொரோனா உச்ச நிலை ஏற்பட தொடங்கியது. செப்டம்பர் முதல் வாரம் மற்றும் இரண்டாவது வாரத்தில் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் மிகமிக அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 5,584 பேர் பாதிப்பு.. வேகமாக குறையும் நோயாளிகள் எண்ணிக்கைதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 5,584 பேர் பாதிப்பு.. வேகமாக குறையும் நோயாளிகள் எண்ணிக்கை

செப்டம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உலகளாவிய தினசரி இறப்புகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் சுமார் 4,500 ஆக இருந்தது. ஆனால் ஜூலை முதல் இறப்புகள் அதைவிட அதிகரிக்க தொடங்கியது.

ஆகஸ்ட் மத்தியில் சராசரி உலகளாவிய தினசரி இறப்புகள் 6,000 ஐ தாண்டின. இருப்பினும், செப்டம்பர் முதல் வாரத்தில், தினசரி இறப்புகள் சற்று குறைந்துள்ளது. இப்போது ஒரு நாளைக்கு 5,000 க்கும் அதிகமான நபர்கள் உலகில் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4039 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
india’s trajectory of fatalities - owing to a sharp rise in the novel coronavirus cases - is now the worst in the world. India registered 89,706 new Covid-19 cases on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X