டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒசாமா கதை தெரியுமா? அமெரிக்கா போலவே உள்ளே புகுந்து தாக்குவோம்.. பாக்.கிற்கு அருண் ஜேட்லி வார்னிங்!

பாகிஸ்தானின் உள்ளே புகுந்து அமெரிக்கா தாக்கியது போலவே இந்தியாவும் உள்ளே புகுந்து தாக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கா போலவே உள்ளே புகுந்து தாக்குவோம்.. அருண் ஜேட்லி வார்னிங்!- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானின் உள்ளே புகுந்து அமெரிக்கா தாக்கியது போலவே இந்தியாவும் உள்ளே புகுந்து தாக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை அரை நூற்றாண்டிற்கு பின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை மீறி இந்தியா தாக்குதல் நடத்திவிட்டு திரும்பி இருக்கிறது. இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்திவிட்டதாக பாகிஸ்தானும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் - இந்தியா பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து இருக்கிறார். பாகிஸ்தான் மீது அவர் கடுமையான புகார்களை வைத்து உள்ளார்.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    அவர் தனது பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது. அங்கு இருக்கும் தீவிரவாத அமைப்புகளை அழிக்கவே தாக்குதல் நடத்தினோம். அதை தொடரவும் நாங்கள் தயங்க மாட்டோம். இதுவரை நடந்த விஷயங்களை பார்த்தால் எவ்வளவு வேகம் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரியும்.

    செயல் வேகம்

    செயல் வேகம்

    நாம் செயலில் அவ்வளவு வேகம் காட்டுகிறோம். ஒரு வாரம் கூட ஒரு நாளாக தென்படும் அளவிற்கு இந்தியா செயல்படுகிறது. ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் அதிரடியாக செயல்பட முடியும்.

    செய்வோம்

    செய்வோம்

    பின்லேடனை பிடிக்க பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததை போல் இந்தியாவும் நுழைய தயார். இந்தியாவால் இனியும் பொறுத்திருக்க முடியாது. அபோதாபாத்தில் அமெரிக்கா செய்ததை நாங்களும் செய்வோம். அமெரிக்கா போலவே இந்தியாவும் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்க முடியும்.

    பலநாள் கனவு

    பலநாள் கனவு

    இது பலநாள் கனவாக இருந்துள்ளது. பல நாள் கோபம். பல நாள் ஏமாற்றம். இப்போது நிறைவேறி இருக்கிறது.
    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லையில் கடுமையான பதற்றம் நீடித்து வருகிறது, என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

    English summary
    Finance minister Arun Jaitley: A week is too long a time for any country. If you look at last 24 hours, one week would appear to be a day. The kind of things we see...I remember when the US Navy SEALs had taken Osama Bin Laden from Abbottabad (Pakistan),then can't we do the same?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X