டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம்.. இந்தியாவிற்கு ஆதரவாக முடிவெடுக்கும் டிரம்ப்.. மனசு மாறிடுச்சே!

ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறப்படுகிறது. ஈரானிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்கும் தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது.

ஈரானுக்கு அமெரிக்காவிற்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை முற்றி இருக்கிறது. ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யாது. அதேபோல் மற்ற நாடுகளையும் இறக்குமதி செய்ய கூடாது என்று கூறியுள்ளது.

[ஆச்சரியம், ஆனால் உண்மை.. டெல்லிக்கு வடக்கேயும் கொடி நாட்டிய 'தமிழ்' ]

இந்தியா என்ன

இந்தியா என்ன

ஈரானில் இருந்து அதிக அளவில் பெட்ரோல், டீசல் வாங்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் நாடுகள் ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்தது.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

இதனால் இந்தியா ஈரான் நாட்டு உறவுகளுக்கு இடையில் பிரச்சனையை உருவானது. உடனே பயந்த இந்தியா சில நாட்களுக்கு முன் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் பொருட்கள் வாங்குவோம் என்று கூறியது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடும் கோபத்திற்கு உள்ளானது. இந்தியா மீதும் பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா கூறியது.

தடை இல்லை

தடை இல்லை

இந்த நிலையில் இந்த தடையில் இருந்து இந்தியாவிற்கு மட்டும் சிறப்பு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவெடுத்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து இன்றோ நாளையோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்தியா அமெரிக்காவின் எந்த தடையும் இல்லாமல் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ய முடியும்.

இன்னும் சில நாடுகள்

இன்னும் சில நாடுகள்

இந்தியா மட்டுமில்லாமல் இன்னும் சில நாடுகளுக்கும் இதேபோல் தடை நீக்கப்பட வாய்ப்புள்ளது. சில பொருளாதர நிபந்தனைகளை கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த முடிவை எடுத்து இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஈரானால் நிலவி வந்த சில பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனாலும் இந்திய ஈரானிடம் இருந்து இப்போது வாங்கும் அளவை விட கூடுதலாக எண்ணெய் வாங்க முடியாது. அடுத்து வருடம் மார்ச் மாதம் வரை மட்டுமே எண்ணெய் வாங்க முடியும். அதன்பின் புதிய ஒப்பந்தம் செய்யும் முன் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
The US may allow India to buy more Oil products from Iran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X