டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்துத்துவாவினருக்கு பதிலடி.. டிஎம் கிருஷ்ணாவை அழைத்து கச்சேரி நடத்திய ஆம் ஆத்மி.. பெரும் வரவேற்பு!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்ட பாடகர் டிஎம் கிருஷ்ணாவின் கச்சேரி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்ட பாடகர் டிஎம் கிருஷ்ணாவின் கச்சேரி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாடகர் டிஎம் கிருஷ்ணா தன்னுடைய வித்தியாசமான முடிவுகளால் பிரபலம் அடைந்தவர். கர்னாடிக் சங்கீதமும், கர்னாடிக் கச்சேரிகளும் ஒரு குறிப்பிட்ட சில மக்களுக்குத்தான் என்பதை உடைத்தவர் அவர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இவர் மீனவ மக்களுடன் எல்லா வருடமும் நடத்தும் கச்சேரி மிக பிரபலம். இந்த நிலையில் பல எதிர்ப்புகளுக்கு இடையில் இவரது கச்சேரி டெல்லியில் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

டிஎம் கிருஷ்ணாவின் கச்சேரி டெல்லியில் நடப்பதாக இருந்தது. இந்தியா விமான துறையும், ஸ்பீக் என்ற தனியார் இசை அமைப்பும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

ஏன் ரத்து

ஏன் ரத்து

இந்த நிகழ்ச்சியில் இவர் அல்லா குறித்தும் இயேசு குறித்தும் பாடுவதாக இருந்தது. வேறு மத கடவுள்கள் குறித்து கர்னாடிக் இசையில் பாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே இதை பாடி இருந்த டிஎம் கிருஷ்ணாவன் பாடல் வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்பட்டு பிரச்சனையும் செய்யப்பட்டது. இதனால் எழுந்த அழுத்தம் காரணமாக இந்த கச்சேரி ஒத்தி வைக்கப்பட்டது.

அழைப்பு விடுக்கப்பட்டது

அழைப்பு விடுக்கப்பட்டது

இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டிஎம் கிருஷ்ணாவை கச்சேரி நடத்த அழைப்பு விடுத்து இருந்தார். டெல்லியைவிட்டு செல்ல வேண்டாம் கச்சேரியை நடத்துங்கள் என்று கூறினார். இதையடுத்து சகேத் பகுதியில் உள்ள கார்டன் ஆப் பைவ் சென்சஸ் பகுதியில் இந்த கச்சேரிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

நடந்தது

நடந்தது

இதையடுத்து பல போராட்டங்களுக்கு பின் டிஎம் கிருஷ்ணா இந்த கச்சேரியில் நேற்று கலந்து கொண்டு பாடினார். அல்லா குறித்தும், இயேசு குறித்து கர்னாடிக் சங்கீதத்தில் இவர் பாடினார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கலந்து கொண்டனர்.

பெரிய வரவேற்பு

பெரிய வரவேற்பு

இந்த நிகழ்ச்சிக்கு அங்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறைவாக எதிர்பார்க்கப்பட்ட கூட்டம் பாஜகவின் விளம்பரத்தால் அதிகம் வந்ததாக கூறப்படுகிறது.

English summary
The Voice of AAP: TM Krishna concert gest huge support after right wings outrage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X