டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன? ஒரே வருடத்தில் இத்தனை நிதி மோசடிகளா? ஆர்பிஐ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

2017-2018 நிதி ஆண்டில் வங்கிகள் பெரிய அளவில் நிதி மோசடியை சந்தித்து இழப்பிற்கு உள்ளாகி உள்ளதாக ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2017-2018 நிதி ஆண்டில் வங்கிகள் பெரிய அளவில் நிதி மோசடியை சந்தித்து இழப்பிற்கு உள்ளாகி உள்ளதாக ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டு உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சென்ற 2017-2018 நிதியாண்டில் வங்கிகள் எந்த அளவிற்கு மோசடி செய்து ஏமாற்றப்பட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது, வெளிநாட்டு நிதி மூலம் ஏமாற்றியது கடந்த நிதி ஆண்டில் அதிக அளவில் வங்கிகள் ஏமாற்றப்பட்டுள்ளது.

எத்தனை நடந்தது

எத்தனை நடந்தது

அதன்படி 2017-2018 வருடத்தில் மட்டும் மொத்தம் 5,917 நிதி மோசடிகள் நடந்து இருக்கிறது. இதில் 2526 மோசடிகள் நேரடியாக கடன் பெற்று செய்யப்பட்டுள்ளது. 2059 மோசடிகள் இணையம் மூலம் செய்யப்பட்டார் சைபர் மோசடிகள் ஆகும்.

மிக மோசம்

மிக மோசம்

ஆர்பிஐ அறிக்கையின்படி, மொத்தம் 41,167 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டை விட 2 மடங்கு அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் மொத்தம் 23,933 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி எல்லாம்

எப்படி எல்லாம்

இதில் அதிகமான மோசடி லோன் பெற்று திரும்ப கொடுக்காதது ஆகும். சில மோசடிகள் இணையம் மூலம் செய்யப்பட்ட சைபர் கிரைம் மோசடி ஆகும். வெளிநாட்டு நிதி பரிமாற்றம் மூலமாகவும் பல கோடிகளுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள்தான் அதிக அளவில் மோசடி செய்து இருக்கிறது.

எது முக்கியம்

எது முக்கியம்

இந்த அறிக்கையில் பெரிய மோசடிகளையும் ஆர்பிஐ பட்டியலிட்டு இருக்கிறது. 14000 கோடிக்கு நடந்த நீரவ் மோடியின் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடங்கி பல முறைகேடுகள் வங்கிகளை பெரிய இழப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
The year 2018 has seen the most number of Bank Frauds than previous years says RBI report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X