டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேபினட் அமைச்சர்- இணை அமைச்சர்- இணை அமைச்சர் தனிப் பொறுப்பு- என்ன வித்தியாசம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் அமையும் அரசு தனது அமைச்சர்களுக்கு கேபினட் அமைச்சர், இணை அமைச்சர், இணை அமைச்சர் தனிப் பொறுப்பு இப்படியெல்லாம் பொறுப்புகளை வழங்கும். இதில் கேபினட் அமைச்சர் என்றால் என்ன, இணை அமைச்சர் என்றால் என்ன, இணை அமைச்சர் தனிப் பொறுப்பு என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில் உள்ள மொத்த உறுப்பினர்களில் சுமார் 10% வரையிலான எண்ணிக்கையில் மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்று நிர்வாக சீர்திருத்தக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கலாம், எத்தனை கேபினட் அமைச்சர்கள் இருக்கலாம், எத்தனை இணை அமைச்சர்கள் இருக்கலாம் என்றெல்லாம் பரிந்துரைக்கவில்லை.

இவை அனைத்தும் பிரதமரின் விருப்பத்திற்கும் செல்வாக்குக்கும் உட்பட்டவை இந்தியாவை பொறுத்தவரையில் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என்ற மூன்று வகை அமைச்சர் பொறுப்புகள் உண்டு. அதோடு துணை அமைச்சர் என்றும் சிலரை நியமித்து கொள்ளலாம் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் வரையறை. இந்தியாவில் பெரும்பாலும் அப்படி யாரையும் நியமிப்பதில்லை.

தேர்தல் முடிவு தந்த உற்சாகம்.. கமல் கட்சியில் பிறக்கிறது இளைஞரணி..!தேர்தல் முடிவு தந்த உற்சாகம்.. கமல் கட்சியில் பிறக்கிறது இளைஞரணி..!

 கேபினட் அமைச்சர் என்றால் என்ன

கேபினட் அமைச்சர் என்றால் என்ன

கேபினட் அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என்ற மூன்று பிரிவுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. கேபினட் என்பது, மத்திய அரசில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு. இந்த அமைப்பில்தான் முக்கியமான துறைகளை கவனிக்கும் அமைச்சர்கள் இருப்பார்கள். இதற்கு நியமிக்கப்படும் அமைச்சர்கள் அரசியலில் மூத்தவர்களாகவும், பல்வேறு துறைகள் சார்ந்த ஆழ்ந்த அனுபவமும், அறிவும் உள்ளவர்களாக பார்த்து தேர்வு செய்யப்படுவார்கள். பெரும்பாலும் அரசியல், சட்டம், தொழில்நுட்பம், வேளாண்மை, வாணிபம், ராணுவம், வெளியுறவு, தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் தனிச் சிறப்பு பெற்றவர்களாகவும் இருப்பார்கள். கேபினட் அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை வழங்குவார்கள்.

செல்வாக்கும் மரியாதையும் அதிகம்

செல்வாக்கும் மரியாதையும் அதிகம்

ஒரு துறை வழங்கப்பட்டாலும் அந்த துறை நிர்வகிக்க பெரிய துறையாக இருக்கும் பட்சத்தில் கேபினட் அமைச்சர்கள் தங்களுக்கு கீழ் ஒன்று அல்லது இரண்டு இணை அமைச்சர்களை உதவிக்கு அமர்த்தலாம். கேபினட் அமைச்சர்கள் தங்களுக்கான துறைகள் மட்டுமல்லாது வேறு சில துறைகளையும் கவனிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது சக கேபினட் அமைச்சர் இல்லாத நிலையில், வெளிநாடு செல்லும்போதோ, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறும்போதோ அல்லது ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கி குறிப்பிட்ட துறைகளில் இருந்து விலகி இருக்கும்போதோ அவர்களுக்கென்று ஒதுக்கிய துறை போக, பிரதமரின் வேண்டுகோளின்பேரில் மற்றொரு துறையையும் கூடுதலாக கவனிக்க வேண்டி வரும். கேபினட் அமைச் சர்களுக்கு பங்களா, கார் போன்ற வசதிகள் இணை அமைச்சர்களை ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே இருக்கும். அரசியல்ரீதியாகவும் கேபினட் அமைச்சர்களுக்கு செல்வாக்கும், மரியாதையும் அதிகம்.

துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த

துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த

கேபினட் அமைச்சர்கள் தவிர இணை அமைச்சர்களில் சிலருக்கு சில துறைகளை ‘தனிப்பொறுப்பு' என்ற பெயரில் வழங்குவார்கள். அதாவது ஒரு துறைக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் வேண்டாம். அதே வேளையில் அந்த துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிலை இருந்தால், பிரதமரின் விருப்பத்தின் அடிப்படையில் அது போன்ற துறைகளை குறிப்பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நினைத்தால் அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப்பொறுப்பில் விடுவது உண்டு. சிவில் விமானப் போக்குவரத்து போன்ற துறைக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் வேண்டாம் என்று நினைத்தால் தனிப்பொறுப்பாக ஒரு இணை அமைச்சரிடம் தருவது உண்டு. இந்த வகை இணை அமைச்சர்கள் தங்களுடைய துறை தொடர்பான எல்லா முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள்.இவர்கள் தங்களுக்கு மேல் ஒரு கேபினட் அமைச்சர் என்று ஒருவர் இல்லாமல் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவார்கள்

சிறப்புச் சலுகைகள் குறைவே

சிறப்புச் சலுகைகள் குறைவே

இணை அமைச்சர்களாக நியமிக்கப் படுகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவோ, அமைச்சர் பொறுப்புக்குப் புதியவர்களாகவோ இருப்பார்கள். இவர்கள், தத்தமது துறையின் கேபினட் அமைச்சரின் வழிகாட்டலின்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இவர்களை அதிகாரம் இல்லாத அமைச்சர்கள் என்று அரசியல் வட்டங்களில் கேலி செய்வார்கள். சில மூத்த அமைச்சர்கள் இணை அமைச் சர்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்புகளை அளித்து நன்றாகத் தயார் செய்வார்கள். வேறு சிலரோ அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சில இணை அமைச்சர்கள் தங்களுக்கான அடிப்படை தேவைகள் கூட செய்து தரப்படுவது இல்லை என்று புகார் கூறிய சம்பவங்களும் நமது நாடாளுமன்றத்தில் நடைபெற்றதாக கூறுவோரும் உண்டு. கடந்த மோடி அரசில் இணை அமைச்சர் ஒருவர் கேபினட் அமைச்சர் ஒருவருக்கு மரியாதை செலுத்தும்போது அந்த கேபினட் அமைச்சர் இவரை கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வாட்சாப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் விரலானது நினைவிருக்கலாம். கேபினட் அமைச்சர்களைவிட இணை அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர படிகள், சிறப்புச் சலுகைகள் போன்றவை குறைவாகவே இருக்கும்.

முறையாக பதிவு செய்யப்படும் கருத்துகள்

முறையாக பதிவு செய்யப்படும் கருத்துகள்

கேபினட்டில் இடம் பெற்ற அமைச்சர்கள் மட்டுமே கேபினட் கூட்டங்கள் நடைபெறும்போது அந்தக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் இணை அமைச்சர்களின் பங்கேற்பு அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே, இணை அமைச்சர்கள் கேபினட் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவார்கள். அவசர முடிவு அல்லது சிறப்பு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமன்றி கேபினட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களும், தேவைப்பட்டால் இணை அமைச்சர்களும் தங்களது கருத்துகளை தெரிவிப்பார்கள். இவ்வாறான கூட்டங்களில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் அமைச்சர்களின் கருத்துகள் அனைத்துமே முறையாக பதிவு செய்யப்படுகிறது.

இப்படியாக மூன்று படிநிலைகளைக் கொண்டுதான் நம்மால் தேர்வு செய்யப்பட மாண்புமிகுக்கள் நம்மை ஆட்சி செய்கிறார்கள்.

English summary
The cabinet minister, the minister of ministers and the minister of the ministries will be responsible for this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X