டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படித்தான் நடக்க போகிறது 7 கட்ட லோக்சபா தேர்தல்.. முழு விவரம் இதோ!

7 கட்டங்களாக நடக்க போகும் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு... தமிழகத்திற்கு ஏப்.18ல் தேர்தல்

    டெல்லி: நாடு முழுவதும் பரபரப்புடன் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட எம்பி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இது சம்பந்தமான அறிவிப்பினை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகிறது. இதில் 22 மாநிலங்கள் அடங்குகிறது.

    There are 7 phases in the polls

    Also Read | வேட்பாளர்களின் கவனத்திற்கு.. கண்டிப்பாக 26 படிவம் தாக்கல் செய்ய வேண்டும்!

    தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2-ம் கட்டத்தில் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம் வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறும்.

    ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குபதிவு நடைபெறும். அந்த 7 கட்ட வாக்குபதிவு தேதிகள் என்னென்ன தெரியுமா? இதோ அந்த பட்டியல்:

    முதல்கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 11ம் தேதி - 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது

    2-ம் கட்ட வாக்குபதிவு: ஏப்ரல் 18-ம் தேதி - 13 மாநிலங்களில் 97 தொகுதிகளில் நடக்க உள்ளது

    3ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 23-ம் தேதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

    4-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 29-ம் தேதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் நடக்க உள்ளது

    5-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 6-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடக்க உள்ளது

    6-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 12-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்க உள்ளது

    7-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 19-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்க உள்ளது

    அனைத்து கட்டமாக வாக்கு பதிவு நடந்து முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 26 ஆகும். வேட்புமனுவை திரும்ப பெறும் கடைசி நாள் மார்ச் 29 ஆகும்

    English summary
    EC has announced the 7 phases in the polls and the dates in MP Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X