டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டையே உலுக்கிய இருவேறு சம்பவங்ளான பில்லா ரங்கா, நிர்பயா.. இரு வழக்குகளின் ஒற்றுமை!

Google Oneindia Tamil News

டெல்லி: பில்லா ரங்காவின் கீதா- சஞ்சய் வழக்கும், நிர்பயா குற்றவாளிகளின் வழக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.

Recommended Video

    கடைசி நொடி வரை போராடிய நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

    2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா தனது ஆண் நண்பருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஆண் நண்பரை அடித்து தாக்கிவிட்டு நிர்பயாவை 6 பேர் வேட்டையாடினர்.

    மிகக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்ணும் தாக்கப்பட்ட ஆண் நண்பரும் சாலையில் வீசப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் , 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    17 வயது சிறுவன்

    17 வயது சிறுவன்

    இதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார். 17 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

    பில்லா ரங்கா

    பில்லா ரங்கா

    இதையடுத்து மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டது. நிர்பயாவின் ஆன்மாவும் சாந்தியடையும். இந்த கொலை வழக்கை ஒத்தது கீதா- சஞ்சய் சோப்ரா கொலை வழக்கு எனப்படும் பில்லா ரங்கா வழக்கு.

    கடத்தல் நாடகம்

    கடத்தல் நாடகம்

    வடமாநிலங்களையே கதி கலங்கிய வைத்த பில்லா, ரங்கா. டெல்லியை சேர்ந்தவர் கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா. இருவரும் அக்காள்- தம்பியாவார்கள். கடந்த 1978 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் ஒரு விழாவுக்கு செல்வதற்காக வழியில் காத்திருந்த போது பில்லாவும் ரங்காவும் லிப்ட் கொடுப்பதாக காரி ஏற்றிக் கொண்டனர். பின்னர் அவர்களை வைத்து கடத்தல் நாடகம் ஆடி பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர்.

    வன்கொடுமை

    வன்கொடுமை

    ஆனால் அந்த குழந்தைகளின் தந்தை ஒரு கடற்படை அதிகாரி என தெரிந்தவுடன் அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர் தம்பியை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு அந்த பெண்ணை இருவரும் வன்கொடுமை செய்து கொன்றனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடி வந்தனர்.

    திகார் சிறையில் தூக்கு

    திகார் சிறையில் தூக்கு

    இவர்களும் டெல்லி, ஆக்ரா என தப்பியோடிக் கொண்டே இருந்தனர். ஒரு நாள் எங்கோ ரயிலில் தப்பி செல்வதற்காக ராணுவ வீரர்கள் இருந்த கோச்சில் ஏறினர். பின்னர் அவர்களிடம் நடந்த விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக கூறியதை அடுத்து அவர்கள் இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பில்லாவும் ரங்காவும் 1982-ஆம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

    இருவரும் ஒரே இடத்தில் தூக்கு

    இருவரும் ஒரே இடத்தில் தூக்கு

    தற்போது பில்லா ரங்கா, நிர்பயா வழக்குகளில் ஒற்றுமைகள் உள்ளன. இரு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் ஓடும் வாகனத்தில் கடுமையாக தாக்கப்பட்டும் பலாத்காரம் செய்யப்பட்டும் கொல்லப்பட்டனர். இரு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் வண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டனர். இரு வழக்குகளின் குற்றவாளிகளும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்தபடியே தூக்கிலிடப்பட்டனர்.

    English summary
    There are similarities in Billa Ranga and Nirbhaya case. What are they?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X